கேரள சுற்றுலாவை மேம்படுத்த லண்டன் பேருந்துகளில் விளம்பரம்! அரசின் புது முயற்சி
கேரளா சுற்றுலாவை மேம்படுத்த உள்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் விளம்பர பிரச்சாரங்களை அம்மாநில அரசு தொடங்கி உள்ளது.
கேரள சுற்றுலா
பொதுவாகவே கேரளா என்றால் பசுமையான இடங்கள் தான் நினைவுக்கு வரும். இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பசுமையான இடங்கள், அழகிய கடற்கரைகள், சுவையான உணவுகள் என சுற்றுலா பயணிகளை கவர பல்வேறு விடயங்கள் உள்ளன.
இந்நிலையில், கேரள சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் உள்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் விளம்பர பிரச்சாரங்களை செய்வதற்கு மாநில அரசு தொடங்கி உள்ளது.
லண்டன் பேருந்துகளில் விளம்பரம்
அதன்படி, லண்டன் பேருந்துகளில் கேரளாவின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள், படகு ஆகியவற்றை காட்டும் விளம்பரங்கள் கொண்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை கேரள மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் லண்டனில் இருந்து முத்திரை பதிக்கும் வீடியோவை முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அரசின் இந்த புதுவித முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |