தாலிபான்களை மீறி ஐஐடி மெட்ராஸில் பட்டம் பெற்ற ஆப்கானிஸ்தான் பெண்!
பெண்களுக்கு கல்வி மறுத்த தாலிபான் ஆட்சியின் எதிர்ப்பை முறியடித்த ஆப்கானிஸ்தான் பெண், சென்னை ஐஐடியில் கெமிக்கல் இன்ஜினியரிங்கில் நல்ல தேர்ச்சி பெற்றுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் மத அடிப்படைவாதத்தின் அடையாளமாக விளங்கும் தாலிபான்களின் ஆட்சியில் பெண் கல்விக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளன. சிறுமிகள் 1 முதல் 6-ஆம் வகுப்பு வரை மட்டுமே படிக்க வேண்டும் என்று தாலிபான் ஆட்சியாளர்கள் சமீபத்தில் அரசாணை வெளியிட்டனர்.
நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பெண் கல்விக்கு தடை உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு ஆப்கானிஸ்தான் பெண் தனியாக தெருக்களில் நடக்கக்கூடாது. ஒரு ஆணுடன் இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது.
happinessbharat
இத்தகைய நிலைமைகளின் கீழ், ஒரு ஆப்கான் பெண் தனது முதுகலை படிப்பை முடித்துள்ளது சாதனைதான்.
அந்தப் பெண்ணின் பெயர் பெஹிஸ்தா கைருதீன் (Behishta Khairudddin). வடக்கு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அவர் ஐஐடி மெட்ராஸில் கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்து முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
2021-ல், ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி வரும்போது அவர் ஐஐடியில் சேர்ந்தார்.
TOI
தாலிபான்களிடம் பிடிபட்டால் தண்டனை எவ்வளவு கடுமையாக இருக்கும் என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாதது.
ஆனால், கடும் விதிகளுக்கு மத்தியில் இந்தியாவுக்கு வர முடியாத பெஹிஷ்தா கைருதீன் ஐஐடி மெட்ராஸில் தொலைதூரக் கல்வி மூலம் ஆன்லைனில் படித்தார். அதற்காக பெஹிஸ்தா தனது வீட்டில் ஒரு ரகசிய ஆய்வகத்தை அமைத்து இப்பொது சாதித்து காட்டியுள்ளார்.