கல்வி பெண்களுக்கானது..!ஆப்கான் சிறுமியின் உரிமை குரல்: வைரலாகும் வீடியோ
ஆப்கானிஸ்தானில் சிறுமி ஒருவர் பெண் கல்விக்காக உரிமை குரல் கொடுத்து பேசும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
பெண் கல்விக்கு தடை
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர்.
இதையடுத்து பெண்களுக்கான வேலை மறுப்பு மற்றும் பொது கட்டுப்பாடுகளை தாலிபான் அரசு அடுக்கடுக்காக விதித்தனர்.
அந்த வரிசையில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் உயர்கல்வி பயில தடை விதித்து உத்தரவிட்டனர்.
AFP/GETTY
இதற்கு ஆப்கானிஸ்தான் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
ஆப்கான் சிறுமியின் வைரல் வீடியோ
இந்நிலையில் ஆப்கான் சிறுமி ஒருவர் அவருடைய தந்தையிடம், என்னை ஏன் பள்ளிக்கு விட மாட்டேன் என்று கூறுகிறீர்கள் என கேட்டு பெண் கல்விக்காக உரிமை குரல் கொடுத்து பேசும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், சிறுமி தன்னுடைய தந்தையிடம் என்னை ஏன் பள்ளிக்கு விட மாட்டேன் என்று கூறுகிறீர்கள் என கேள்வி எழுப்புகிறார், அதற்கு பதிலளித்த சிறுமியின் தந்தை இங்கு ஆண் குழந்தைகளுக்கு மட்டும் தான் கல்வி என்பதால் என்னால் உன்னுடைய சகோதரனை மட்டுமே பள்ளிக்கு அனுப்ப முடியும் என்று கூறுகிறார்.
உடனே அந்த சிறுமி கல்வி பெண்களுக்கு மட்டும் தான், ஆண்கள் மோதல் மூலம் அழிவை ஏற்படுத்துகின்றனர், அதனால் மோதல் மற்றும் அழிவு ஆகிய இரண்டும் தான் ஆண்களுக்கு எனக் கூறுகிறார்.
அத்துடன் நான் நன்றாக படித்து மருத்துவராக, ஆசிரியராக ஆக வேண்டும் என்று அந்த சிறுமி வீடியோவில் தைரியமாக பேசுகிறார். அதற்கு அவர் தந்தையும் விரைவாக அவளை பள்ளிக்கு அனுப்புவதாக சிறுமிக்கு உறுதியளிக்கிறார்.
பெண் கல்விக்காக உரிமை குரல் கொடுத்து பேசும் சிறுமிக்கு இணையவாசிகள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |