முகங்களை மூடிக்கொண்டு செய்தி வாசித்த தொகுப்பாளர்...தாலிபான்கள் உத்தரவால் அவதியுறும் ஆப்கான் பெண்கள்!
ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசின் உத்தரவின் அடிப்படையில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தங்கள் முகம் முழுவதையும் மறைத்து கொண்டு இன்று தங்களது செய்தி வாசிப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு தாலிபான்கள் கடந்த 2021ம் ஆண்டு அகஸ்ட் 15ம் திகதி ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து, பெண்கள் உடல்களை முழுவதுமாக மறைக்கும் புர்கா அணிவது கட்டாயம், பாதுகாவலர்களின் துணை இல்லாமல் பெண்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை மற்றும் சிறுமிகள் மேல்நிலைக் கல்வியை தொடர தடை, என பெண்களுக்கு எதிரான பல்வேறு அடக்குமுறை சட்டங்களை தாலிபான் அரசாங்கம் விதித்து வருகிறது.
Reuters#Afghanistan’s Taliban has ordered women TV presenters to cover their faces on air. This comes 2 weeks after religious police ordered Afghan women to wear face veil in public. pic.twitter.com/axROBdiM4P
— Ramy Abdu| رامي عبده (@RamAbdu) May 20, 2022
அத்துடன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த தாலிபான் அரசின் செய்தி தொடர்பாளர் Akif Sadeq Mohajir, செய்தி நிறுவனங்களில் பணிப் புரியும் பெண் செய்திவாசிப்பாளர்கள் சனிக் கிழமை முதல் தங்கள் முகங்கம் முழுவதையும் மறைக்கும் புர்காவை கட்டாயமாக அணிய வேண்டும், மற்றும் அதனை சம்பந்தபட்ட தொலைக்காட்சி நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இந்த நடைமுறையை கடைப்பிடிக்காத நிறுவனம் மீதும், சம்பந்தப்பட்ட ஊழியர் மீதும் தீவர நடவடிக்கை எடுக்கப்படும் என Akif Sadeq Mohajir எச்சரித்தும் இருந்தார்.
இந்தநிலையில், தாலிபான்கள் விதித்த தடைகளை மீறி சனிக் கிழமை சில தொலைக்காட்சி நிறுவனங்களின் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தங்கள் முகங்களை மறைக்காமல் பணியில் ஈடுபட்டனர்.
REUTERS/Ali Khara
இதனை கடுமையாக கண்டித்த தாலிபான் அரசாங்கம், விதிமுறைகளை கடைப்பிடிக்கா விட்டால் தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமையான இன்று முன்னணி செய்தி நிறுவனங்களான TOLOnews, Ariana Television, Shamshad TV மற்றும் 1TV ஆகியவற்றின் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தங்கள் முகங்களை முழுவதுமாக மறைத்து கொண்டு செய்தி வாசிப்பில் ஈடுப்பட்டனர்.
AFP/Wakil Kohsar
இதுத் தொடர்பாக கருத்து தெரிவித்த பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர், தாலிபான்களின் மிரட்டலால் தங்களை செய்தி நிறுவனங்கள் முகத்தை மறைக்க கட்டாயப்படுத்துகின்றனர், அவ்வாறு செய்ய மறுக்கும் வாசிப்பாளர்களை நிறுவனத்தின் வேறு பணிகளுக்கோ அல்லது பணியை விட்டு வெளியேறவோ நிர்பந்திக்கின்றனர் என தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: தீயாய் பரவும் கொரோனா...அமெரிக்காவின் உதவியை மறுக்கும் வடகொரியா: ஜோ பைடன் தகவல்
இவ்வாறு தாலிபான்களின் விதிகளுக்கு கட்டுப்பட்டு தங்களின் முகத்தை மறைத்தால், அடுத்தது பெண்கள் பொது பணிகளில் ஈடுபடக் கூடாது என கட்டளையிடுவார்கள் என தெரிவித்தார்.
AFP