ஆப்கானிஸ்தானில் கைக்குண்டு வெடிப்பு - தாய், 5 குழந்தைகள் உயிரிழப்பு..!
ஆப்கானிஸ்தானில் கைக்குண்டு வெடித்ததில் பெண் மற்றும் அவரது 5 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கைக்குண்டு வெடிப்பு
ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தில் ஒரு கைக்குண்டு வெடித்ததில் ஒரு பெண், அவரது 5 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான், கோர்கண்ட் கிராமத்தில் உள்ள ஒரு குடியிருப்பு வீட்டில் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது. குழந்தைகள் தங்கள் வீட்டில் கைக்குண்டுகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதேபோல், கடந்த மார்ச் 17ம் தேதி லோகார் மாகாணத்தில் வெடிக்காத மோட்டார் ஷெல் தாக்கியதில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும், இச்சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் முழுவதிலும், கண்ணிவெடிகள், மோட்டார் குண்டுகள் அபாயங்கள் குறித்து தாய்மார்கள், குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளை சரியாக கவனிக்காததால் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.