துருக்கி இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட அதிசய குழந்தை: இறந்து விட்டதாக கருதப்பட்ட தாயுடன் மீண்டும் இணைப்பு
துருக்கி நிலநடுக்கத்திலிருந்து மீட்கப்பட்ட அதிசய குழந்தை, இறந்து விட்டதாக கருதப்பட்ட தாயுடன் மீண்டும் சேர்க்கப்பட்டது.
அதிசய குழந்தை
தென் - மத்திய துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் கடந்த பிப்ரவரி மாதம் ரிக்டர் அளவு கோலில் 7.8 என்ற அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கம் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தின் 128 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு படையினர், இடிபாடுகளில் இருந்து ஆயா(Aya) என்ற இரண்டு மாத குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
You probably remember this picture of the baby who spent 128 hours under rubble after an earthquake in Turkey. It was reported that the baby's mom died.
— Anton Gerashchenko (@Gerashchenko_en) April 2, 2023
Turns out, the mom is alive! She was treated in a different hospital. After 54 days apart and a DNA test, they are together… pic.twitter.com/T7B0paUFxL
இடிபாடுகளில் சிக்கி 128 மணி நேரத்திற்கு பிறகும், குழந்தை ஒன்று உயிருடன் இருப்பதை பார்த்தவர்கள், அந்த குழந்தையை கடவுளின் அடையாளம் என்று வாழ்த்தினர்.
மேலும் குழந்தையை அனைவரும் அதிசயம் என்று குறிப்பிட்டனர், ஆனால் நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி குழந்தையின் தாய் இறந்ததாக வெளியான செய்திகள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
மீண்டும் தாயுடன் இணைந்த குழந்தை
இந்நிலையில் 54 நாட்களுக்கு பிறகு இறந்து விட்டதாக கருதப்பட்ட தாயுடன், நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்த அதிசய குழந்தை மீண்டும் இணைந்துள்ளது.
தாயும், குழந்தையும் 54 நாட்களுக்கு பிறகு இணையும் அந்த தருணத்தை அந்த நாட்டின் குடும்பம் மற்றும் சமூக சேவைகளுக்கான அமைச்சர் டெரியா யானிக் ட்வீட்டரில் பகிர்ந்துள்ளார்.
54 günlük hasret sona erdi.?
— Derya Yanık (@deryayanikashb) April 3, 2023
Enkaz altından 128 saat sonra kurtulan, hemşirelerimizin Gizem Bebek ismini koyduğu Vetin Begdaş 54 gün sonra annesine kavuştu.
Vetin artık bizim de bebeğimiz.
Bakanlık olarak desteğimiz her zaman yanında olacak. pic.twitter.com/66sWKR53z3
துருக்கி நிலநடுக்கத்தில் 57,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், குழந்தையின் தாய் உயிருடன் இருப்பதாகவும் தனி மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த மறு இணைவு நடந்துள்ளது.
மேலும் தகவலின் அடிப்படையில், குழந்தை இதுவரை உறவினர்களின் பராமரிப்பில் இருந்தது தெரியவந்துள்ளது.