76 வயதிலும் கொள்ளை அழகு! தன்னை விட 40 வயது குறைவான இளைஞரை காதலிக்கும் கோடீஸ்வர பெண்
அமெரிக்காவை சேர்ந்த பாடகியும், பல கோடிகளுக்கு அதிபதியுமான 76 வயது Cherக்கு அவரை விட 40 வயது குறைவான நபருடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா என பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
40 வயது வித்தியாசம்
Cherன் சொத்து மதிப்பு $360 மில்லியன் ஆகும். இவரும் 36 வயதான Alexander Edwards என்பவரும் காதலிக்கின்றனர். இதை சில மாதங்களுக்கு முன்னர் Cher உறுதிப்படுத்தினார்.
இருவருக்கும் இடையே உள்ள 40 வயது வித்தியாசம் குறித்து Cher கூறுகையில், நான் என் வாழ்க்கையில் இளைய ஆண்களை சந்திக்காமல் இருந்திருந்தால், என் வாழ்வு முழுமை பெற்றிருக்காது.
ஏனென்றால் வயதான ஆண்கள் என்னை மிகவும் விரும்புவதில்லை. என் வயதுடைய இரண்டு ஆண் நண்பர்கள் எனக்கு இருந்தனர், ஆனால் அவர்களுக்கு சில காரணங்களால் என்னைப் பிடிக்கவில்லை.
postsen
நிச்சயதார்த்தம்
நான் யாருக்காகவும் எனது ஆளுமையை விட்டுக்கொடுக்கவில்லை என்று கூறினார். இதனிடையில் கிறிஸ்துமஸ் தினத்தன்று Alexander தனக்கு கொடுத்த வைர மோதிரத்தின் புகைப்படத்தை Cher டுவிட்டரில் வெளியிட்டிருந்தார்.
அதை பார்த்த பலரும், உங்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா என கேள்வியெழுப்பியுள்ளனர். இரண்டு காதல் பறவைகளும் நிச்சயதார்த்தம் செய்துள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக ரசிகர்கள் ஊகிக்கின்றனர்.
Cherக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
BACKGRID