அரசியல் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள AI - எங்கே தெரியுமா?
AI நாளுக்கு நாள் அனைத்து துறைகளிலும் அதன் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
AI யின் வளர்ச்சியால் பாரிய வேலை இழப்பு ஏற்படும், எதிர்காலத்தில் AI உலக ஆள கூடும் என்ற அச்சம் மனிதர்களிடையே உள்ளது.
கட்சி தலைவரான AI
சமீபத்தில், அல்பேனியா டெண்டர்களை மேற்பார்வையிட்டு ஊழலை ஒழிக்க அதன் அமைச்சரவையில், டியெல்லா(Diella) என அழைக்கப்படும் AI அமைச்சரை நியமித்தது.
இந்நிலையில், ஜப்பான் நாட்டில் கட்சி ஒன்றின் தலைவராக AI நியமிக்கப்பட்டுள்ளது.
அகிடகாட்டாவின் முன்னாள் மேயரான ஷின்ஜி இஷிமாரு(Shinji Ishimaru), கடந்த ஜனவரி மாதம் Path to Rebirth party என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.
2024 டோக்கியோ ஆளுநர் தேர்தலில், வலுவான ஆன்லைன் பிரச்சாரத்தின் மூலம் 2வது இடத்தைப் பிடித்து கவனம் பெற்றார்.
ஆனால், ஜூன் மாதம் நடந்த டோக்கியோ சட்டமன்றத் தேர்தலில் இந்த கட்சியின் 42 வேட்பாளர்களும், ஜூலை மாதம் நடந்த மேல்சபைத் தேர்தலில் கட்சியின் 10 வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர்.
இந்த தோல்வி காரணமாக, கட்சியில் இருந்து விலகுவதாக ஷின்ஜி இஷிமாரு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, கட்சியின் தலைவராக AI செயல்படும் என கியோட்டோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற 25 வயது கோகி ஒகுமுரா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
AI தலைவரின் உதவியாளராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், கட்சியின் பெயரளவிலான தலைவராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், AI கட்சி உறுப்பினர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தாது. மாறாக, கட்சின் வளங்களை நிர்வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |