AI டிஜிட்டல் டீக்கடை! டீ மாஸ்டர் இல்லாமலே QR Code மூலம் விரும்பியதை சாப்பிடலாம்
இந்திய மாநிலம் தெலங்கானாவில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் டீக்கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் டீக்கடை
தெலங்கானா மாநிலம், கரீம்நகரில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் சார்ந்த டிஜிட்டல் டீக்கடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த டீக்கடையில் டீ மாஸ்டர்கள், பணியாளர்கள் யாரும் கிடையாது. தேயிலை ஆர்வலர்கள் பாரம்பரிய தேநீர் மாஸ்டர் இல்லாமல் தங்களுக்குப் பிடித்தமான டீயை சுவைக்கலாம்.
அதுமட்டுமல்லாமல், QR குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான தண்ணீர், பிஸ்கட் மற்றும் தேநீர் ஆகியவற்றை வாங்கலாம்.
இந்த நவீன டீக்கடையை ஆந்திர மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கங்குலா கமலாகர், கரீம்நகர் மேயர் ஒய் சுனில் ராவ் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
600 கடைகள் திறப்பு
இதுகுறித்து தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினோத்குமார் கூறும்போது, "தற்போது டீ மாஸ்டர்கள் கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. அதுவும் அவர்கள் அதிக சம்பளம் கேட்கின்றனர். இந்த தொழில்நுட்ப டீக்கடையால் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விரும்பியவற்றை வாங்கி சாப்பிடலாம்.
தற்போது, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களில் ஒரே நேரத்தில் 600 கடைகள் திறக்கப்பட்டுள்ளன. நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் முன்பதிவுகளை நாங்கள் பெற்றுள்ளோம்.
மேலும் இந்த புதிய தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் உள்ள தேநீர் பிரியர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |