காசாவில் மனிதாபிமான உதவி பெற காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 30-க்கும் மேற்பட்டோர் பலி!
காசாவில் மனிதாபிமான உதவி பெற காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
காசாவில் உதவிக்காகக் காத்திருந்த மக்கள் கூட்டத்தின் மீது இஸ்ரேலிய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 30-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், டஜன் கணக்கானோர் காயமடைந்தனர். நேரில் பார்த்தவர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் அளித்த தகவலின் படி, இந்த சோகமான சம்பவம் காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) விநியோக மையங்களுக்கு அருகே நிகழ்ந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதரவுடன் செயல்படும் GHF அமைப்பு, இஸ்ரேல் காசா மீதான 11 வார முற்றுகையை நீக்கிய பிறகு, மே மாத இறுதியில் உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க தொடங்கியது.
ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதார அமைச்சகம், சனிக்கிழமை அன்று குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டதாகவும், உள்ளூர் தகவல்கள் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் கான் யூனிஸ் நகரின் கிழக்கே அமைந்துள்ள GHF உதவி விநியோக மையத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் (2 மைல்) தொலைவில் உள்ள டீனா (Teina) பகுதியில் உயிரிழந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |