விமானத்தை திடீரென ரத்து செய்த ஏர் பிரான்ஸ் நிறுவனம்: இந்தியர்கள் உட்பட பல பயணிகள் தவிப்பு
ரொரன்றோவுக்குச் செல்லும் இணைப்பு விமானத்தை ஏர் பிரான்ஸ் நிறுவனம் திடீரென ரத்து செய்ததால், இந்தியர்கள் உட்பட பல பயணிகள் பாரீஸ் விமான நிலையத்தில் தவிக்கும் நிலை உருவானது.
தொழில்நுட்பக் கோளாறு
பாரீஸிலிருந்து ரொரன்றோ செல்லும் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டதாகவும், மாற்று விமானம் இல்லையென்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சினையால், இந்தியாவிலிருந்து பயணித்த பயணிகள் உட்பட பலர் பாரீஸ் விமானத்திலேயே தவிக்க நேர்ந்தது.
ட்வீட் ஒன்றை வெளியிட்ட ஏர் பிரான்ஸ் நிறுவனம், நடந்த அசௌகர்யத்துக்காக வருந்துவதாகவும், முடிந்தவரை விரைவாக பயணிகளை அவர்கள் சென்று சேரவேண்டிய இடத்துக்குக் கொண்டு சேர்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
பாரீஸில் வாழும் ஊடகவியலாளரான Noopur Tiwari இது தொடர்பாக வெளிட்டுள்ள ட்வீட்களில் ஒன்றில், பாரீஸிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஏர் பிரான்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக விமான நிலையத்துக்கு சென்றுகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |