ரஷ்யாவில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்: இந்திய பயணிகள் 216 பேர் அவதி
இன்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தியாவிலிருந்து சான் பிரான்சிஸ்கோ சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் அவசரமாக ரஷ்யாவில் தரையிறக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
ஏர் இந்தியாவின் விமானம் எண் AEI-173 ஜூன் 6 அன்று டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு புறப்பட்டது, அப்போது வழியில் நடுவில் விமானத்தின் இன்ஜின் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதாக தகவல் கிடைத்தது. விமானத்தில் 216 பயணிகளும் 16 பணியாளர்களும் இருந்தனர்.
இதையடுத்து விமானம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 10,000 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மகடன் நகர விமான நிலையத்திற்க்கு விமானம் திருப்பி விடப்பட்டு பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
ஆனால் ஏர் இந்தியா நிறுவனம் மும்பையில் இருந்து மகடனுக்கு மற்றொரு மாற்று விமானத்தை அனுப்ப திட்டமிட்டுள்ளது. ஆனால் ஒழுங்குமுறை சிக்கல்களால் மாற்று விமானம் தாமதமானது.
மகடனில் குறைந்த வசதிகள் இருப்பதால், பலர் உள்ளூர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தற்காலிகமாக தங்கியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள், அத்தியாவசிய மருந்துகள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். கடல் உணவுகள் அசைவ உணவுகள் அதிகமாக கிடைக்கும் அவ்விடத்தில், சைவ உணவு உண்பவர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
Twitter@dip_niranjan
உள்ளூர் மொழி தெரியாததால், அதிகாரிகளுடன் பேச முடியாமல் பயணிகள் சிரமப்பட்டனர். ரஷ்யாவில் ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் இல்லாததால் ஏர் இந்தியா நிறுவனத்தால் முழு உதவி செய்ய முடியவில்லை என தெரிகிறது.
Twitter@dip_niranjan
இதை சரி செய்ய ஏர் இந்தியா, ரஷ்ய அதிகாரிகள், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் இணைந்து நிலைமையை கண்காணித்து வருகின்றன.
ஏர் இந்தியா விமானங்கள் பசிபிக் பெருங்கடல் வழியாக அமெரிக்காவின் மேற்கு கடற்கரைக்கு பறக்கின்றன. இது ரஷ்ய வான்வெளியில் பறக்க முடியாத மற்ற விமானங்களை விட ஏர் இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க நன்மையை அளிப்பதாக தெரிகிறது.
Delhi-San Francisco #AirIndia flight makes #emergency landing in #Russia due to an engine malfunction.
— Chaudhary Parvez (@ChaudharyParvez) June 7, 2023
The #Boeing had 232 passengers and 11 crew members on board. They were all placed in a local school to wait for a #backup plane.pic.twitter.com/9htXtVbAbY
#AirIndia Delhi-San Francisco flight in small #Russian port town: Magdan does not have big hotels and all the 232 people have been staying at makeshift accommodationshttps://t.co/7enf87glyB pic.twitter.com/YOxAEy2ULV
— The Times Of India (@timesofindia) June 7, 2023
Air India Flight, Air India News, Indian Passengers