Air India-Lufthansa கூட்டு ஒப்பந்தம் - ஐரோப்பாவிற்கு விமானங்கள் அதிகரிப்பு
ஏர் இந்தியா, லுஃப்தான்ஸா குழுமத்துடன் தனது கூட்டாண்மையை மேலும் விரிவாக்கி, ஆஸ்திரியன் ஏர்லைன்ஸுடன் புதிய கோட்ஷேர் ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது.
இந்த புதிய ஒப்பந்தம், ஏற்கனவே உள்ள Lufthansa மற்றும் SWISS ஏர்லைன்ஸுடன் கூடிய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துகிறது.
இதன் மூலம் இந்திய துணைக்கண்டத்துக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான விமான சேவைகள் பெருகும்.
இப்போது, 100க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் இந்த கூட்டு பயண திட்டத்தில் உள்ளன.
இதில் ஆஸ்திரியன் ஏர்லைன்ஸின் 26 புதிய வழித்தடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன, இது ஏற்கனவே Lufthansa மற்றும் SWISS மூலம் வழங்கப்படும் 55 வழித்தடங்களுக்கு கூடுதலாக இருக்கிறது.
இதன்மூலம், ஏர் இந்தியா பயணிகள் ஐரோப்பாவின் 26 நகரங்களுக்கும் அமெரிக்காவின் 3 நகரங்களுக்கும் விமான சேவைகளைப் பெறுவர்.
அதேபோல், லுஃப்தான்ஸா பயணிகள் இந்தியாவின் 15 நகரங்களுக்கும், நேபாளம், மெல்போர்ன், மற்றும் சிட்னி போன்ற இடங்களுக்கும் ஏர் இந்தியா வழியாக பயணம் செய்யலாம்.
இந்த கூட்டாண்மையின் மூலம், இரு நிறுவனங்களின் மாறுபட்ட கட்டண திட்டங்கள், லவஞ்ச் வசதி மற்றும் விமானப் பயண புள்ளிகள் உள்ளிட்ட பயனர் நலன்கள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Air India Expands Partnership with Lufthansa, Lufthansa Group, More Europe Flights