G20 கையேட்டில் அக்பர் புகழ்! உண்மையான முகம் எது என கபில் சிபல் கிண்டல்
இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் வழங்கப்பட்ட கையேட்டில் அக்பர் புகழ் குறித்து இருப்பதால், உண்மையான முகம் எது என உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.
G20 கையேடு
சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற G20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகளுக்கு 'பாரத் ஜனநாயகத்தின் தாய்' என்ற கையேடு வழங்கப்பட்டது. இந்த கையேட்டின் 38 -வது பக்கத்தில் மொகலாய பேரரசர் அக்பர் புகழ் குறித்த கருத்து இடம்பெற்றுள்ளது.
அந்த பக்கத்தில், "மக்களின் உணர்வு என்பது இந்தியாவில் ஆட்சி அமைப்பவர்களுக்கு முக்கிய அம்சமாக இருக்கிறது. மொகலாய பேரரசர் அக்பர் ஆட்சிக்காலத்தில் மதங்களை பற்றி எண்ணாமல், பொதுமக்களின் நலனுக்காக அனைவரையும் அணைத்து செல்லும் ஜனநாயகம் கடைபிடிக்கப்பட்டது.
தன்னுடைய காலத்தையும் தாண்டி எதிர்கால தலைமுறைகளின் வாழ்வு குறித்து அக்பர் சிந்தித்தார்" என்ற கருத்து இடம் பெற்றுள்ளது.
கபில் சிபல் கேள்வி
இந்நிலையில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், பிரதமர் நரேந்திர மோடி 'மன் கி பாத்' நிகழ்ச்சியை G20 கையேட்டுடன் ஒப்பிட்டு கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், "முகலாய பேரரசர் அக்பரை அமைதி மற்றும் ஜனநாயகத்தின் முன்னோடியாக G20 கையேடு புகழ்கிறது. உலகத்திற்கு ஒரு முகம். பாரத் என்னும் இந்தியாவிற்கு மற்றொரு முகம். உண்மையான இதயத்தின் குரல் எது" என பதிவிட்டுள்ளார்.
G20 Magazine :
— Kapil Sibal (@KapilSibal) September 13, 2023
Government hails Mughal emperor Akbar as proponent of peace and democracy !
One face :
For the world
Another :
For India that is Bharat !
Please inform us about the real mann ki baat !
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |