ரொனால்டோ படையை வீழ்த்தி…மெஸ்ஸியின் கால்பந்து படை திரில் வெற்றி
சவுதி அரேபியாவில் இன்று நடைபெற்ற கால்பந்து போட்டியில் ரியாத் லெவன் அணியை 4-5 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி வெற்றி பெற்றுள்ளது.
மெஸ்ஸி-ரொனால்டோ மோதல்
சவுதி அரேபியாவில் இன்று பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் மற்றும் ரியாத் லெவன் ஆகிய அணிகளுக்கு இடையே நட்பு ரீதியான கால்பந்து போட்டி நடைபெற்றது.
இதில் அல் நஸர் அணிக்கு ஒப்பந்தம் ஆன கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியாத் லெவன் அணிக்காக விளையாடுவார் என்றும், பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணியில் மெஸ்ஸி களமிறங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
#CR7?
— JOHN (@fxstreet_walker) January 19, 2023
We probably may not see them together ever ???⚽⚽ pic.twitter.com/v4NK4LGto0
இந்த இரண்டு கால்பந்து ஜாம்பவான்கள் இதற்கு முன்பாக 2008ஆம் ஆண்டு பார்சிலோனா மற்றும் மான்செஸ்டர் அணிகள் மோதிய போட்டியில் எதிர்கொண்டனர். ஆனால் அந்த போட்டி டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
வெற்றியை சூடிய மெஸ்ஸி படை
பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் மற்றும் ரியாத் லெவன் ஆகிய இரு அணிகளும் மோதிய இந்த ஆட்டம் சவுதி அரேபியாவின் கிங் ஃபஹத் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.
ஆட்டத்தின் முதல் பாதியிலேயே இரு அணிகளை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான்கள் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ கோல் அடித்து ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தினர்.
ஆட்டத்தின் 3 நிமிடத்தில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணிக்கு கோல் அடித்து மெஸ்ஸி அனைவருக்கும் அதிர்ச்சியளிக்க, அதற்கு பதிலடி கோலாக ஜாம்பவான் வீரர் ரொனால்டோ ரியாத் லெவன் அணிக்காக ஆட்டத்தின் 34 வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.
?? Cristiano Ronaldo opens his goal scoring account in Saudi Arabia with a brace.#RiyadhSeasonCup|#CR7?|#Messi? pic.twitter.com/Kcpy9f6glU
— FIFA World Cup Stats (@alimo_philip) January 19, 2023
இதையடுத்து மார்கினோஸ் ஆட்டத்தின் 43 வது நிமிடத்தில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணிக்காக மற்றொரு கோலை அடித்து அசத்த, அதற்கு பதிலடியாக ரொனால்டோ மற்றொரு கோலை ரியாத் லெவனிற்காக அடித்து அசத்தினார்.
இதன்மூலம் ஆட்டத்தின் முதல் பாதி 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது,
இரண்டாவது பாதியிலும் கோல் வேட்டையை இரண்டு அணிகளும் தொடர்ந்தன, பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி சார்பில் ramos, mbappe, ekitike ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்தனர்.
THE BEST GOATS FRIENDLY EVER
— Sports Leo Africa (@SportsLeoAfrica) January 19, 2023
?: 433
Lionel Messi #RiyadhSeasonCup Rest in Peace #CR7? HERE WE GO #Messi? | #AlNassr Pulisic and Ziyech Cristiano Ronaldo #PSGRiyadhSeasonTeam Trossard Welcome pic.twitter.com/cOzzScODPz
ரியாத் லெவன் அணிக்காக hyun-soo hang, anderson talisca ஆகியோர் இரண்டு கோல் அடித்தனர். இதனால் ஆட்டத்தின் முடிவில் ரியாத் லெவன் அணியை 4-5 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி வெற்றி பெற்றுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் விறுவிறுப்பாக நடைபெற்றது.