6 ஆண்டுகளுக்கு பின் சூறையாடும் வைரஸ் - நாடு முழுவதும் கடும் எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை
இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிபா வைரஸால் 14 வயது சிறுவன் உயிரிழந்ததையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் கடும் எச்சரிக்கை
தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் நிபா வைரஸால் 14 வயது சிறுவன் இறந்ததையடுத்து, அதிக ஆபத்துள்ள பிரிவில் 60 பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அம்மாநில சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
பழ வெளவால்கள் மற்றும் பன்றிகள் போன்ற விலங்குகளிடமிருந்து வரும் நிபா, மனிதர்களுக்கு மரண, மூளை வீக்க காய்ச்சலை ஏற்படுத்தும்.
உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) நிபா ஒரு முன்னுரிமை நோய்க்கிருமியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது, ஏனெனில் இது ஒரு தொற்றுநோயைத் தூண்டும் திறன் கொண்டது.
நோய்த்தொற்றைத் தடுக்க தடுப்பூசி மற்றும் குணப்படுத்த எந்த சிகிச்சையும் இல்லை.
அதையடுத்து கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். பின் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உமிழ்நீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் அவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கவலைக்கிடமாக இருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிறுவனுடன் தொடர்பு கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார்.
பொது இடங்களில் முகமூடி அணிவது மற்றும் மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்ப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிபா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் அதிரடித் திட்டத்தை உருவாக்கி வருவதாக மாநில அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |