எனக்கு எதிராக புதிய பயங்கரவாத குற்றச்சாட்டுகள் தயாராகி வருகின்றன: புடினின் விமர்சகர் அலெக்ஸி நவல்னி
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரும், புடினின் விமர்சகருமான அலெக்ஸ் நவல்னி தனக்கு பயங்கரவாத குற்றச்சாட்டுகள் தயாராகி வருவதாக கூறியுள்ளார்.
பயங்கரவாத குற்றசாட்டு
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி , தன்னை பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் கூறியுள்ளார்.
@ndtv
நவல்னி உதவியாளர்களால் ட்விட்டரில் வெளியிடப்பட்ட கருத்துகளில், மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டில் ஏற்கனவே பதினொன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நவல்னி
"அவர்கள் என்னை 30 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு அச்சுறுத்தும் அபத்தமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர், சிறையில் இருக்கும் போது பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்" என கூறியுள்ளார்.
கொலை முயற்சி
கடந்த ஆகஸ்ட் 2020ஆம் ஆண்டில் சைபீரியாவில் நவல்னி விஷம் குடித்து உயிருக்கு போராடிய போது, மேற்கத்திய ஆய்வகங்கள் திட்டமிட்ட கொலை முயற்சி என கூறின.
அவரை கொலை செய்ய முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டை கிரெம்ளின் மறுத்துள்ளது.
@skynews
இதனை தொடர்ந்து ஜெர்மனியில் மருத்துவ சிகிச்சை பெற்று ரஷ்யா திரும்பிய அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது பிரச்சார அமைப்புகள் ரஷ்யாவில் "தீவிரவாதிகள்" என்று தடை செய்யப்பட்டுள்ளன.
குற்றச்சாட்டு மறுப்பு
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் குண்டுவெடிப்பால் கொல்லப்பட்ட பிரபல இராணுவ அதிகாரி மற்றும் உக்ரைனில் ரஷ்யாவின் பிரச்சாரத்தின் ஆதரவாளரான விளாட்லென் டாடர்ஸ்கியின் கொலைக்கு நவல்னி ஆதரவாளர்கள் தான் காரணம் என ரஷ்ய புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
@skynews
ஆனால் நவல்னி ஆதரவாளர்கள் கொலைக்கும் நவல்னிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளனர்.
புதன்கிழமை தனித்தனியாக, ரஷ்ய புலனாய்வாளர்கள் நவல்னியுடன் தொடர்புடைய ஒரு வழக்கில் 11 பேர் ’சர்வதேசம் தேடப்படும் பட்டியலில்’ சேர்க்கப்பட்டுள்ளனர் என்று ரஷ்ய அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.