உயிருள்ள 20 பிணைக் கைதிகள் விடுதலை: இஸ்ரேல் வழங்கிய முக்கிய தகவல்
ஹமாஸ் பிடியில் இருந்த 20 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பிணைக் கைதிகள் விடுவிப்பு
இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தமானது அமுலுக்கு வந்துள்ளது.
அமெரிக்காவின் முன்னெடுப்பில் உருவான இந்த அமைதி ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமான பிணைக் கைதிகள் விடுவிப்பை ஹமாஸ் தற்போது முன்னெடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஹமாஸ் பிடியில் உள்ள உயிருள்ள 20 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர், இதனை இஸ்ரேலிய ராணுவமும் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் 13 பிணைக் கைதிகள் கொண்ட இரண்டாவது குழு விரைவில் செஞ்சிலுவைச் சங்கத்திடம் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிணைக் கைதிகள் தற்போது இஸ்ரேலிய படைகள் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
ஹமாஸ் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களில் Gali மற்றும் Ziv Berman என்ற இரட்டை சகோதர்களும் உள்ளடங்குவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |