புதிய K-STAR விசா திட்டத்தை அறிமுகப்படுத்திய தென் கொரியா - STEM நிபுணர்களை ஈர்க்கும் முயற்சி
2026-ஆம் ஆண்டில் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ள K-STAR விசா திட்டத்தை தென் கொரியா அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த விசா, உலகளாவிய அளவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகளில் திறமை வாய்ந்த நிபுணர்களை தென் கொரியாவிற்கு வரவேற்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. '
இத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 400-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிபுணர்கள், குறிப்பாக AI, பயோடெக்னாலஜி மற்றும் மேம்பட்ட பொறியியல் துறைகளில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
K-STAR விசா, F-2 குடியிருப்பு விசாவிலிருந்து F-5 நிரந்தர வதிவிட விசா மற்றும் பின்னர் குடியுரிமைக்கு செல்லும் வழியை எளிமைப்படுத்துகிறது.
தென் கொரியாவின் முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் இந்த திட்டத்தில், Master மற்றும் PhD பட்டம் முடித்த வெளிநாட்டு மாணவர்கள் நேரடியாக F-2 விசாவுக்கு பரிந்துரைக்கப்படலாம்.
வேலை வாய்ப்பு இல்லாவிட்டாலும், பட்டம் முடித்ததும் அவர்கள் குடியிருப்புக்கு தகுதி பெறுவர்.
இந்த திட்டத்தின் முக்கிய இலக்குகள்:
- STEM துறையில் திறமை வாய்ந்த நிபுணர்களை நாட்டில் நிலைத்துவைக்கும் முயற்சி
- தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பங்களிக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆதரவு
- இந்திய மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு நீண்ட கால தொழில்நுட்ப வாழ்க்கை உருவாக்கும் வாய்ப்பு
2023-ஆம் ஆண்டு தொடங்கிய பைலட் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 300 நிபுணர்கள் F-2 விசா பெற்றுள்ளனர்.
2025-ல் பல்கலைக்கழகங்களின் பங்கேற்பம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
K-STAR விசா, தென் கொரியாவை உலகின் முன்னணி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையமாக மாற்றும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
K-STAR visa South Korea, South Korea STEM immigration, Korea F-2 F-5 visa pathway, AI biotech visa Korea, Korea skilled migration 2026, STEM talent visa Korea, Korea permanent residency STEM, K-STAR visa eligibility