£70 மில்லியன் பவுண்டுக்கு புது வீடு..!அமேசான் நிறுவனர் Jeff Bezos வாங்கி குவிக்கும் சொத்துகள்
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அமேசான் நிறுவனர் Jeff Bezos, தனித் தீவில் 70 மில்லியன் பவுண்டுகள் செலவில் மூன்றாவது மாளிகையை வாங்கியுள்ளார்.
புதிய வீடு வாங்கிய Jeff Bezos
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அமேசான் நிறுவனர் Jeff Bezos, "பணக்காரர்களின் பதுங்கு குழி" என்று அழைக்கப்படும் Florida-வின் Indian Creek island என்ற தனித் தீவில் உள்ள தனது நிலப்பகுதியில் இன்னொரு சொத்தை வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
£70 மில்லியன் பவுண்டுகள் செலவில் ஆறு படுக்கையறைகளை கொண்ட இந்த மாளிகையை அவர் வாங்கியுள்ளதாக சொத்து பதிவுகள் கூறுகின்றன.
இது அந்த தனித் தீவில் அவர் மேற்கொள்ளும் மூன்றாவது சொத்து கையகப்படுத்தல் ஆகும். புதிதாக வாங்கிய மாளிகையைப் பற்றிய விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும், அதன் அதிக விலை அதன் ஆடம்பரத்தை காட்டுகிறது.
Jeff Bezos கலிபோர்னியா சொத்து
"பணக்காரர்களின் பதுங்கு குழி" என்று அழைக்கப்படும் தீவில் மற்ற இரண்டு பங்களாகளையும் Jeff Bezos $147 மில்லியன் (சுமார் £116 மில்லியன்) செலுத்தி வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த பணக்கார தீவில் ஜாரெட் குஷ்னர் மற்றும் இவான்கா டிரம்ப் ஆகிய பல பணக்காரர்களுக்கு சொந்தமாக பங்களா உள்ளது குறிப்பிடத்தக்கது. Bezos தனது அதீத செலவுகளுக்காக ஏற்கனவே செய்திகளில் இடம் பெற்றுள்ளார்.
2020 ஆம் ஆண்டு, அவர் கலிபோர்னியாவில் இதுவரை விற்பனை செய்யப்பட்ட மிக விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றான 165 மில்லியன் டாலர் மதிப்பிலான Beverly Hills நிலப்பகுதியை வாங்கினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Amazon’s Jeff Bezos Billionaire Bunker mansion purchase,
Bezos expands Billionaire Bunker estate,
Jeff Bezos third mansion private island,
Bezos £70 million mansion purchase,
Billionaire Bunker luxury real estate,