அமேசான் காடுகளில் 40 நாட்கள் சிக்கி உயிர் தப்பிய 4 சிறார்கள்: வெளியான முதல் புகைப்படம்
அமேசான் காட்டுக்குள் விமான விபத்தில் சிக்கி 40 நாட்கள் தத்தளித்து, இறுதியில் மீட்கப்பட்ட 4 சிறுவர்களின் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது ராணுவ மருத்துவமனையில்
கொலம்பியாவை சேர்ந்த 4 பூர்வகுடி சிறுவர்களும் தற்போது ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மீண்டு வருவதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
@dailymail
சகோதரர்களான 13 வயது லெஸ்லி, 9 வயது சோலினி, நான்கு வயது டியென் நோரியல் மற்றும் ஒரு வயது குழந்தை கிறிஸ்டின் ஆகியோரே கொலம்பியாவின் பொகோட்டாவில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மே 1ம் திகதி நடந்த விமான விபத்தில் சிக்கி இவர்களின் தாயார் மற்றும் அந்த விமானத்தின் விமானி கொல்லப்பட்ட நிலையில், சுமார் 40 நாட்கள் இந்த நான்கு சிறார்களும் உயிர் தப்ப போராடியுள்ளனர்.
இவர்களை வில்சன் என பெயரிடப்பட்டுள்ள பெல்ஜியம் ஷெப்பர்ட் மோப்பநாய் தான் கண்டுபிடிக்க உதவியுள்ளது. விபத்து நடந்த விமானத்தின் அருகாமையில் அந்த சிறார்கள் நான்கு நாட்கள் காத்திருந்துள்ளனர். எவரேனும் தங்களை மீட்க வருவார்கள் என்ற நம்பிக்கையில்.
@dailymail
அதன் பின்னர் தான், குற்றுயிராக கிடந்த அந்த சிறார்களின் தாயார், அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அனுப்பியுள்ளார். மட்டுமின்றி, திடீரென்று ஹெலிகொப்டர் சத்தம் கேட்க, பயத்தில் அந்த சிறுவர்கள் நால்வரும் ஒளிந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
குட்டி விமானம் விபத்தில் சிக்கியுள்ளது
ஆனால் இவர்களை தேடும் பொருட்டே ஹெலிகொப்டர் வனப்பகுதியில் வட்டமிட்டுள்ளது. மேலும், பூர்வகுடி மக்கள் அவர்களை கண்டுபிடித்து நெருங்கிய போதும், அந்த சிறார்கள் பயத்தில் பதிலளிக்க மறுத்துள்ளனர்.
மே 1ம் திகதி இயந்திர கோளாறு காரணமாக இவர்கள் பயணம் செய்த குட்டி விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் விமானி, சிறார்களின் தாயார் மற்றும் மற்றொரு நபர் என மூவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன.
@dailymail
பல வாரங்கள் நீண்ட தேடுதல் நடவடிக்கைகளுக்கு பின்னர், விபத்துக்குள்ளான விமானம் கண்டுபிடிக்கப்பட்டாலும், சிறார்களை அப்பகுதி எங்கும் காணாமல் மீட்புக் குழு தடுமாறியது.
இந்த நிலையில் சில மைல்கள் தொலைவில் சிறுவர்கள் நால்வரையும் கடந்த வெள்ளிக்கிழமை கொலம்பிய ராணுவத்தின் சிறப்பு மீட்புக்குழுவினர் மற்றும் பூர்வகுடி மக்களால் மீட்கப்பட்டனர்.
@AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்