விமான விபத்தில் சிக்கி 40 நாட்கள் அமேசான் காட்டுக்குள் தத்தளித்த சிறார்களின் தந்தை கைது
கொலம்பியாவில் வனப்பகுதியில் விமான விபத்தில் சிக்கி, 40 நாட்கள் தத்தளித்து, மீட்கப்பட்ட சிறார்களின் தந்தையை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
விபத்தில் தாயார் கொல்லப்பட
உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், குறித்த நபர் விமான விபத்தில் பலியான தமது மனைவியை துன்புறுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலேயே கைதானதாக கூறப்படுகிறது.
@AP
ஆனால் பொலிஸ் தரப்பில் கைது தொடர்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்றே தெரியவந்துள்ளது. தொடர்புடைய விமான விபத்தில் தாயார் கொல்லப்பட, சிறுவர்கள் காட்டுக்குள் 40 நாட்கள் போராடினர்.
தற்போது அந்த சிறுவர்களின் தந்தை Manuel Ranoque கைது செய்யப்பட்டுள்ளதை, சட்டத்தரணிகள் அலுவலகமும் உறுதி செய்துள்ளது. அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், கைது நடவடிக்கையின் காரணம் எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும், இந்த வழக்கில் குடும்ப வன்முறை தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தம்மிடம் ஒப்படைக்க வேண்டும்
தமது பிள்ளைகளை தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர்களின் தாத்தா பாட்டியுடன் Manuel Ranoque போராடி வருவதாக கூறப்படுகிறது. சிறார்களின் தாயார் விமான விபத்து நடந்து நான்கு நாட்களுக்கு பின்னரே காயங்கள் காரணமாக மரணமடைந்துள்ளார்.
@getty
இந்த நிலையில், இரு வளர்ப்பு மகள்கள் உட்பட நான்கு சிறார்களும் கொலம்பியாவின் குழந்தைகள் பாதுகாப்பு முகமையின் கட்டுப்பாட்டிலேயே உள்ளனர். Manuel Ranoque தமது மனைவியை அடித்து துன்புறுத்துபவர் என்றே அவரது தந்தை குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |