பெரும் தொழிலதிபர்கள் கலந்து கொண்ட மாநாடு.., ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் அம்பானி
இந்திய மாநிலம் மேற்கு வங்கத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஏற்கனவே ரூ.45 ஆயிரம் கோடி முதலீடு செய்த நிலையில், மேலும் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்யவிருப்பதாக கூறியுள்ளார்.
தொழில் மாநாடு
இந்திய மாநிலம், மேற்குவங்கத்தில் உள்ள கொல்கத்தாவில் 7 -வது வங்க உலகளாவிய தொழில் மாநாடு நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, ஐடிசியின் சஞ்சிவ் புரி, விப்ரோவின் ரிஷாத் பிரேம்ஜி, ஆர்.பி.சஞ்சீவ் கோயங்கா குரூப் சஞ்சீவ் கோயங்கா, டிவிஎஸ் குழுமம் ஆர்.தினேஷ், ஹர்ஷவர்தன் நியோஷியா, தேவி ஷெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.
அம்பானி பேசியது
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அம்பானி, "மேற்கு வங்க மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தியானது தேசிய சராசரியை விட 11.5 சதவீதம் அதிகமாக உள்ளது. 2030 -ம் ஆண்டுக்குள் 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி இந்தியா முன்னேறி வரும் நிலையில், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை மேற்குவங்க மாநிலம் விரைவில் எட்டும்.
பொருளாதார வளர்ச்சியில் ஆசியப் புலிகள் என கொரியா, சிங்கப்பூர், தைவான் போன்ற நாடுகளை சொல்லப்படுகிறது. ஆனால், முயற்சி மற்றும் உழைப்பின் மூலம் இந்த ஆசிய புலிகளை வங்கப்புலி விஞ்சும்" எனக் கூறினார்.
மேலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஏற்கெனவே மேற்குவங்கத்தில் ரூ.45 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ள நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் மேலும் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வங்க உலகளாவிய தொழில் மாநாட்டின் தூதுவரும், கிரிக்கெட்டருமான செளரவ் கங்குலி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மாநாடு இன்றுடன் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |