அதிர்ச்சி சம்பவம்: அமெரிக்காவில் பிணத்துடன் வாழ்ந்து வந்த நபர்
அமெரிக்காவில் பிணத்துடன் வாழ்ந்து வந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிணத்துடன் வாழ்ந்து வந்த நபர்
அமெரிக்கா, அலபாமா மாகாணம் பிர்மிங்காம் நகரில் வாழ்ந்து வருபவர் லியாண்ட்ரூ ஸ்மித் ஜூனியர் (61). சில நாட்களுக்கு முன் இவருடைய குடும்ப உறவினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆனால் லியாண்ட்ரூ ஸ்மித் ஜூனியர் இத்தகவலை யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். அந்த பிணத்துடனே ஸ்மித் ஜூனியர் வசித்து வந்துள்ளார். பிணத்தின் வாடை அப்பகுதியில் பரவவே, அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் வீட்டை சோதனையிட்டனர். அப்போது, வீட்டில் இறந்து கிடந்த சடலத்தைப் பார்த்து பொலிசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மீட்கப்பட்ட அந்த சடலத்தை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கைது செய்த பொலிசார்
இதன் பின், பொலிசார் ஸ்மித்திடம் விசாரணை நடத்தியதில், ஸ்மித் அந்த பிண உடலை தவறாக பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார் வாக்கர் கவுன்டி சிறையில் அடைத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |