கனடாவால் புகை சூழ்ந்த அமெரிக்கா (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
ஜெர்மனில் இயங்கி வரும் 5 ரஷ்ய தூதரகங்களில் 4 தூதரகங்களை மூடுவது என ஜெர்மன் அரசாங்க முடிவு செய்துள்ளதாக ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சின் ஊடகப் பேச்சாளர் இன்று (01) தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் ஓராண்டை கடந்தும் தற்போது மீண்டும் வலுவடைந்து வருகிறது.
பிரித்தானியாவில் பாடசாலை மாணவர்களுக்கு இலவச இ-சிகரெட்டுகள் வழங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் என பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
கனடாவில் பரவிய காட்டுத் தீயால், அண்டை நாடான அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் நகரத்தில் புகை மண்டலம் சூழ்ந்ததாக கூறப்படுகின்றது.
எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், அமெரிக்காவின் முன்னாள் உப ஜனாதிபதி மைக் பென்ஸ், போட்டியிடுவதற்கு தயாராகிவருகின்றதாக கூறப்படுகின்றது.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.