அமைதிக்கு பதிலாக உக்ரைனில் போரை வளர்க்கும் அமெரிக்கா: பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய அமைச்சர்
அமெரிக்காவின் சுய ஆதாயத்திற்காகவே உக்ரைனை அந்த நாடு ஆதரித்து வருவதாகவும், இதனாலையே அமைதிக்கு பதிலாக போரை வளர்ப்பதாகவும் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்கா களமிறங்க நேரலாம்
தைவான் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா களமிறங்க நேரலாம் என்ற நிலையில், சீனாவின் வெளிவிவகார அமைச்சர் Qin Gang ஜோ பைடன் நிர்வாகத்தை கடுமையாக சாடியுள்ளார்.
@getty
தைவான் தொடர்பில் தவறான முடிவை அமெரிக்கா எடுக்கும் என்றே தாம் நம்புவதாகவும், அது உண்மையில் பேரழிவிற்கு வழிவகுக்கும் என்றார் அவர். ரஷ்யா உடனான தங்களின் உறவு என்பது சமீப காலமாக மேம்பட்டு வருவதாகவும், இது சர்வதேச அளவில் பயனளிக்கும் விடயம் எனவும் Qin Gang பாராட்டியுள்ளார்.
ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் வழங்க சீனா தயாராகி வருவதாக மேற்கத்திய நாடுகளின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர், சீனா ஒருபோதும் குற்றம் சாட்டுதல், தடைகள், அடக்குமுறை மற்றும் அச்சுறுத்தல்களை ஏற்றுக்கொள்ளாது என்றார்.
மேலும், சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு என்பது பரஸ்பர நலன்கள் மற்றும் நட்பின் அடிப்படையில் இருக்க வேண்டும் எனவும், அமெரிக்க உள்ளூர் அரசியலை போன்றதாக இருக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
கட்டாயம் ஆட்டம் காண வைக்கும்
ரஷ்யாவுக்கு ஆயுதமளிக்க வேண்டாம் என கட்டாயப்படுத்தும் அமெரிக்கா, ஏன் தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்கிறது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தைவான் தொடர்பில் முன்னெடுக்கப்படும் தவறான முடிவு இரு நாடுகளுக்குமான உறைவை கட்டாயம் ஆட்டம் காண வைக்கும் என்றார் Qin Gang.
@AP
மேலும், உக்ரைன் தொடர்பில் முன்னெடுக்கப்படும் அமைதி பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முறியடிக்கப்படுவதாகவும், உக்ரைனில் போர் நீடிப்பது என்பது சில ரகசிய கரங்களுக்கு தேவையாக இருக்கிறது எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
போர், தடைகள் மற்றும் அழுத்தம் ஆகிய எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது. நிதானமும், பகுத்தறிவும், உரையாடலும்தான் தற்போதைய தேவை எனவும் அமைச்சர் Qin Gang வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.