அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் இயந்திரத்தில் பயங்கர தீ: 178 பயணிகள் அதிர்ச்சி!
அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இயந்திர கோளாறு காரணமாக டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தின் இயந்திரத்தில் தீ
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 1006 (போயிங் 737-800) இயந்திர கோளாறு காரணமாக டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறங்கியது.
விமானம் கிட்டத்தட்ட 178 பயணிகள் பயணித்த நிலையில் விமானம் தரையிறங்கியதும் விமான இயந்திரத்தில் இருந்து தீப்பிடித்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
American Airlines Flight 1006, a Boeing 737-800 flying from Colorado Springs to Dallas, suffered a major ground fire after diverting to Denver this afternoon. pic.twitter.com/kxV2HDjorV
— OSINTtechnical (@Osinttechnical) March 14, 2025
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 1006 (போயிங் 737-800) கொலராடோ ஸ்பிரிங்ஸ் பகுதியிலிருந்து டல்லாஸ் ஃபோர்ட் வொர்த் நோக்கி பறந்தது.
விபத்தின் விவரம்
விமானம் பறந்து கொண்டிருக்கும் போது இயந்திரத்தில் அசாதாரண அதிர்வுகள் ஏற்பட்டதாக விமானக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து உடனடியாக பெடரல் ஏவியேஷன் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விமானம் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் மாலை 5.15 மணிக்கு தரையிறக்கப்பட்டது.
துர்திஷ்டவசமாக விமானம் தரையிறங்கிய சில நிமிடங்களில் விமானத்தின் இயந்திரத்தில் தீ பிடித்தது.
சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்களில் பயணிகள் விமானத்தின் இறக்கைகளில் நிற்பதையும், விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிழம்புகள் மற்றும் புகை வெளியேறுவது பதிவாகியுள்ளது.
பாதுகாப்பாக மீட்கப்பட்ட பயணிகள்
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், அனைத்து 178 பயணிகளும், விமான குழுவினரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.
சிறிய காயமடைந்த 12 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்: குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!
விமான இயந்திரத்தில் பற்றிய தீ அணைக்கப்பட்டு, விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதாக டென்வர் சர்வதேச விமான நிலையம் அறிவித்துள்ளது.
இந்த விபத்து குறித்து எஃப்ஏஏ முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |