பயணியின் தலையில் பேன்., அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.!
பயணி ஒருவரின் தலைமுடியில் பேன் ஊர்ந்து செல்வதைக் கண்டு, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பயணி ஒருவர் டிக்டோக்கில் பகிர்ந்த வீடியோ வைரலானது.
பொதுவாக, ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், பயணிகளில் யாருக்கேனும் அவசர மருத்துவ உதவி, வெடிகுண்டு மிரட்டல்கள், வானிலை ஒத்துழைக்காமல் இருந்தால், விமானம் அவசரமாக தரையிறங்குவதை (Emergency Landing) பார்க்கலாம்.
ஆனால், இங்கு ஒரு பெண் பயணியின் தலையில் பேன் ஊர்ந்து செல்வது (Lice In Womans Hair) விமானத்தை அவசரமாக தரையிறக்கச் செய்துள்ளது. இந்த சம்பவம் ஜூன் மாதம் நடந்துள்ளது, ஆனால் தாமதமாக வெளிச்சத்திற்கு வந்தது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து நியூயார்க் சென்றுகொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, ஒரு பெண்ணின் தலையில் பேன் ஊர்ந்து செல்வதைக் கண்ட சக பயணிகள், விமான ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளனர். விமானம் பீனிக்ஸ் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து ஈதன் ஜூடெல்சன் என்ற பயணி தனது அனுபவத்தை TikTok பகிர்ந்துள்ளார்.
அதில், 'விமானம் திருப்பி விடப்படுவதாக மட்டுமே விமான ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் பயணிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. ஆனால், நான் சுற்றி பார்த்தேன். யாருக்கும் பயமில்லை. எந்த பதற்றமும் காணப்படவில்லை. ஆனால் விமானம் தரையிறங்கியது.
உடனே ஒரு பெண் விமானத்தின் முன்புறம் விரைந்தார். அதன்பிறகு, விமானத்தை அவசரமாக தரையிறக்கியது ஏன் என்று சக பயணியிடம் கேட்டபோது உண்மை தெரிந்தது.,' என்று அவர் விளக்கினார்.
இந்த சம்பவத்தால் விமானம் 12 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. அதுவரை பயணிகள் ஓய்வெடுக்க ஹோட்டல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
American Airlines flight emergency landing, Emergency landing for lice in woman's hair