வட கொரியாவுக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க ராணுவ வீரர்: வெளியாகியுள்ள பரபரப்பை ஏற்படுத்தும் தகவல்
அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் வட கொரியாவுக்குள் அத்துமீறி நுழைந்தபோது கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரைக் குறித்து வட கொரிய அரசு தெரிவித்துள்ள விடயங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Joint Security Area
வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் அமைந்துள்ள 250 கிலோமீற்றர் இடைவெளி, Joint Security Area என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் பொதுமக்கள் சுற்றுலா செல்ல அனுமதி உள்ளது. அந்த இடத்திலிருந்து இரு கொரியாக்களின் வீரர்களும் தங்கள் எல்லைகளை பாதுகாத்து நிற்பதைக் காணமுடியும்.
இந்நிலையில், அந்த பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த அமெரிக்க ராணுவ வீரரான ட்ராவிஸ் கிங் ( Travis King, 23) என்பவர், அனுமதிக்கப்பட்ட பகுதியைத் தாண்டி வட கொரிய எல்லைக்குள் நுழைந்துள்ளார்.
அவரைக் கைது செய்து காவலில் அடைத்துள்ளனர் வட கொரிய அதிகாரிகள்.
வெளியாகியுள்ள பரபரப்பை ஏற்படுத்தும் தகவல்
இந்நிலையில், ட்ராவிஸ் அமெரிக்க ராணுவத்தில் மோசமாக நடத்தப்பட்டதாலும், இனரீதியாக பாரபட்சம் காட்டப்பட்டதாலுமே, வேண்டுமென்றே வட கொரியாவுக்குள் அவர் நுழைந்துள்ளதாக வட கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், வட கொரியா அல்லது ஒரு மூன்றாவது நாட்டில் அவர் புகலிடம் கோர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் வட கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
news.sky
ட்ராவிஸின் நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கு எரிச்சலையூட்டியுள்ள நிலையில், அவருக்கு தண்டனையளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரது ஊதியம் பிடித்துவைக்கப்படுவதுடன், அவமானப்படுத்தப்பட்டு அவர் ராணுவத்திலிருந்து வெளியேற்றப்படலாம்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக வட கொரியாவால் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர் ட்ராவிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
The Times of Israel
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |