'குட் நைட்' திரைப்படத்தை போல தூங்கும் அமெரிக்கர்கள்!
எந்த தொந்தரவும் இல்லாமல் நிம்மதியான தூக்கத்தை பெற அமெரிக்கர்கள் தனி அறையை விரும்புவதாக ஆய்வு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிம்மதியான தூக்கம் வேண்டும்
நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு இரவில் நிம்மதியான தூக்கம் வேண்டும் தான் பலரது எண்ணமாக இருக்கிறது.
களைப்பு, மன சோர்வு ஆகியவற்றில் இருந்து விடுபட்டு காலையில் புத்துணர்ச்சி அடைவதற்கு நிம்மதியான தூக்கம் முக்கியமான ஒன்றாகும். நாள் ஒன்றுக்கு ஒரு மனிதனின் சாரசரி தூக்கம் 7 முதல் 8 மணி நேரங்கள் வரை இருக்க வேண்டும்.
ஆனால், அவ்வாறு தூங்க முடியாமல் போனாலோ, தூக்கமின்மை பிரச்சனையால் அவதி அடைந்தாலோ சிந்தனை தடுமாற்றம், தெளிவின்மை, தலைவலி போன்றவை ஏற்படும்.
தூக்கம் என்பது மனிதனுக்கு முக்கியமாக பார்க்கப்படும் இந்த நேரத்தில், அதனை சரியாக செய்யாவிட்டால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு விளைவுகளை சந்திக்கும் நிலை ஏற்படும்.
பொதுவாக ஒரு வீட்டில் 2 படுக்கை அறைகள் இருக்கும். ஒரு அறையில், கணவன் மனைவி தூங்குவார்கள். மற்றொரு அறையில் மீதம் உள்ளவர்கள் தூங்குவார்கள். அப்படி தூங்கும் போது ஒற்றுமை நீடித்து பந்தத்தை வலுவாக்கும்.
தனி அறையை விரும்பும் அமெரிக்கர்கள்
இந்நிலையில், நம்முடன் சேர்ந்து தூங்கும் மற்றொருவருக்கு குறட்டை விடும் பழக்கம் இருந்தால் இரவு முழுவதும் தூக்கம் கெட்டு விடும். இதனால், குடும்பத்தில் பல பிரச்சனைகள் உருவாகின்றன. இதனால், கணவன், மனைவிக்குள் விவாகரத்து வரை கூட செல்வதை நாம் பார்த்திருக்கிறோம்.
சரியான தூக்கமின்மையால் அவதிப்படும் நபர்கள் குடும்ப உறுப்பினர்கள் மீது பழி சுமத்தாமல் அதற்கான தீர்வு காண்பது அவசியமான ஒன்று.
இதனிடையே, அமெரிக்காவில் இந்த ஆண்டு மார்ச் மாதம் 2005 பேரிடம் நிம்மதியான தூக்கம் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 15% பேர் தங்கள் இணையரின் தொந்தரவு இல்லாமல் தூங்க தனி அறைகளை தேர்வு செய்கின்றனர். 20% பேர் நிம்மதியான தூக்கத்தை பெற எப்போதாவது தனி அறையை தேர்வு செய்வதாக கூறியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |