படுத்தவுடன் தூக்கம் வரவில்லையா? கவலை வேண்டாம்- இதை ட்ரை பண்ணுங்க
இன்றைய காலக்கட்டத்தில் பலர் தூக்கம் வராமல் கஷ்டப்படுகிறார்கள். இரவு தூக்கம் மிகவும் முக்கியமாகும்.
ஒரு மனிதன் நிம்மதியாக தூங்காவிட்டால் அவனால் இயல்பாக இருக்க முடியாது. அளவான தூக்கமாவது இருக்க வேண்டும். நாம் செல்போன், லேப்டாப் போன்றவற்றை அதிகமாக பயன்படுத்துகிறோம்.
இதனால் நம்மால் இரவில் சீக்கிரம் தூங்குவது கிடையாது. இதனால் கண் எரிச்சல், தூக்கமின்மை போன்ற பல பிரச்சினைகளில் நாம் சிக்கிக்கொள்கிறோம். இரவு 10 மணி முதல் காலை 3 மணி வரை உடல் ஓய்வில் தூக்கத்தில் இருக்க வேண்டும்.
அப்பொழுதுதான் ஜீரண மண்டலம், சுவாச மண்டலம் நன்றாக இயங்கும். நுரையீரல் நன்கு சக்தி பெற்று இயங்கினால்தான் சிறுகுடல் நன்கு இயங்கும். இரவில் தூங்கவில்லையென்றால் அஜீரணக் கோளாறு, அல்சர், வயிற்றில் கட்டிகள், கேன்சர் கூட வரலாம். இதனால், ஒவ்வொரு மனிதனும் இரவில் நன்றாக தூங்க வேண்டும்.
சரி... படுத்தவுடன் தூக்கம் வர வேண்டும் என்றால், இதோ இதை படியுங்கள்... நிச்சயம் பலன் கொடுக்கும்.
- இரவில் தூக்கம் வரவில்லையென்றால், புத்தகம் படிக்கலாம். நீங்கள் தூங்க செல்லும் முன்பு உங்களுக்கு பிடித்தமான புத்தகத்தை வாசித்தால் நிச்சயம் நிம்மதியான தூக்கம் வரும்.
- நிம்மதியான தூக்கம் வேண்டும் என்றால், இரவில் தூங்கச் செல்லும் முன் மஞ்சள் பால் குடிக்கலாம். நிச்சயம் பலன் உண்டு.
- தூக்கம் வரவில்லையென்றால், இரவில் தூங்கச் செல்லும் முன் தேநீர் குடிக்கலாம்.
- இரவில் தூங்கச் செல்லும் முன் ஒரு குளியல் போடலாம். இரவில் குளித்தால் ஆழ்ந்த தூக்கத்தை பெறுவீர்கள்.
- தினமும் தூங்கச் செல்லும் முன் மூச்சு பயிற்சி செய்யலாம். நல்ல பலனை கொடுக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |