வாழை இலை குளியல் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
பொதுவாக வாழை மரத்தில் உள்ள அத்தனை பொருட்களுமே மனிதர்களுக்கு மிகுந்த பயன் அளித்து வருகிறது.
காய், கனி, பூ, தண்டு, வேர்க் கிழங்கு என்று அனைத்தையும் மனிதர்க்கு அளித்து, அவர்களின் வாழ்வைக் காக்கும் அதிசய மரம் ஆகும்.
அதிலும் அந்தகாலத்தில் நமது முன்னோர்கள் வாழை இலையில் குளியல் மேற்கொள்வார்கள். இது உடலுக்கு பல நன்மைகளை தருகின்றது.
வாழை இலை குளியல் என்பது சூரியக் குளியல் போலத்தான்.
இது பல உடல் நல பிரச்சினைகளை சரி செய்கின்றது.
அந்தவகையில் வாழை இலை குளியல் எப்படி செய்வது? என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.
எப்படி செய்வது?
உடல் முழுவதும் நீளமான 2 வாழை இலைகளை கீழே நீளவாக்கில் போட்டு அதன்மேலே வாழை இலை குளியல் செய்ய உள்ள நபரை படுக்க வைக்கவேண்டும்.
பின்னர் அவர் உடல் மேல் மேலும் மூன்று நீளமான வாழை இலைகளை வைத்து உடல் முழுவதும் மூன்று முதல் நான்கு இடங்களில் இறுக்கம் இல்லாமல் கட்டிவிட வேண்டும். மூக்கு மற்றும் கண் பகுதியில் சிறிது துவாரம் விட வேண்டும்.
இதுபோல உள்ள நிலையில் இளம் வெயில் நேரத்தில் 45 நிமிடம் இருக்க வேண்டும்.
சரியாக வைத்து அவிழ்த்து பார்க்கும்போது உடலில் இருக்கும் கெட்ட நீர்களை அதிக அளவில் வெளியேற்றிவிடும். இதுபோல தொடர்ந்து செய்யும்போது உடலில் உள்ள பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
இந்த வாழை இலை குளியலை தொடர்ந்து மூன்று நாட்கள் செய்யலாம்.
நன்மைகள்
- மூட்டுவலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி, மணிக்கட்டு வலி,
- தலைவலி, ஒருபக்க தலைவலி
- மூக்கடைப்பு
- நுரையீரல் பிரச்சினை
- முதுகுவலி
- தொடைவலி
- தோல் வியாதி
- ரத்தக் கொதிப்பு
- சர்க்கரைவியாதி
- பாத எரிச்சல்
- தூக்கமின்மை
- உடலில் ஏற்படும் கெட்ட வாடை
- உடல் பருமன் பிரச்சினைகள்