அயோத்தி ராமர் கோயிலுக்கு அருகே வீட்டுமனை வாங்கிய அமிதாப்பச்சன்.., எத்தனை கோடிகள் தெரியுமா?
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நெருங்கி வரும் நேரத்தில் அங்கு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் பிரமாண்ட வீட்டுமனை வாங்கியுள்ளார்.
ராமர் கோயில் கும்பாபிஷேகம்
பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரும் ஜனவரி 22 -ம் திகதி நடைபெற உள்ளது. அப்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நிறுவ உள்ளார்.
மேலும், ராமர் கோயிலின் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்கள் அழைக்கப்பட உள்ளனர். இவர்களை தவிர கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் சொல்லப்படுகிறது.
மேலும், பாலிவுட் நடிகர்கள் அமிதாப்பச்சன், ஆலியா பட், ரன்பீர், ரஜினிகாந்த், துர்கா ஸ்டாலின் என பல திரை பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட வீட்டுமனை
இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நெருங்கி வரும் நேரத்தில் அங்கு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் பிரமாண்ட வீட்டுமனை வாங்கியுள்ளார். சுமார் 10,000 சதுர அடி கொண்ட இந்த நிலத்தின் மதிப்பு ரூ. 14.5 கோடி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
அயோத்தி ராமர் கோவிலுக்கு அருகே மும்பையைச் சேர்ந்த ஹவுஸ் ஆஃப் அபிநந்தன் லோத்தா என்ற நிறுவனமானது 51 ஏக்கர் நிலப்பரப்பளவில் வீட்டு மனை திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த நிலத்தில் 5 ஸ்டார் ஹொட்டலுடன் பிரம்மாண்டமான வீடுகளும் கட்டப்பட உள்ளன.
இத்திட்டத்தை 2028 -ம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அமிதாப்பச்சன் அங்கு ரூ. 14.5 கோடி மதிப்பிற்கு வீட்டுமனையை வாங்கியுள்ளார். அயோத்திக்கு அருகே பல கோடி மதிப்பில் நிலம் வாங்கியிருப்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |