பில் கேட்ஸ் முதல் மார்க் ஜூக்கர்பெர்க் வரை.., அம்பானி வீட்டு திருமணத்திற்கு யாருக்கெல்லாம் அழைப்பு?
அம்பானி வீட்டு திருமண ஏற்பாடுகள் 4 மாதங்களுக்கு முன்பே நடைபெற்று வரும் நிலையில் உலக தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம்
Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
1995 -ம் ஆண்டு பிறந்த ஆனந்த் அம்பானி Reliance Industries Ltd -ன் எரிசக்தி வணிகத்தை வழிநடத்தி வருவதோடு, தாயார் நீடா அம்பானியுடன் சேர்ந்து மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியையும் வழிநடத்துகிறார். மேலும், ஜியோ இயக்குநராகவும் 2 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
லொட்டரியில் அடித்தது ரூ.1 கோடி.., பழனி பாதயாத்திரை சென்ற கேரள பக்தருக்கு சில மணி நேரத்தில் அதிர்ஷ்டம்!
கடந்த 2022 -ம் ஆண்டு டிசம்பரில் ராஜஸ்தானின் நாத்வாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் இடையே ரோகா நிகழ்வு நடைபெற்றது. பின்னர், இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி மும்பையில் நடைபெற உள்ளது.
உலக தொழிலதிபர்களுக்கு அழைப்பு
இந்நிலையில், திருமண கொண்டாட்டங்கள் குஜராத்தின் ஜாம்நகரில் மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில் உலக பணக்காரர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனர் bill Gates, மெட்டா சிஇஓ Mark Zuckerberg, பிளாக்ராக் சிஇஓ லாரி ஃபிங்க், பிளாக்ஸ்டோன் தலைவர் ஸ்டீபன் ஸ்வார்ஸ்மேன், டிஸ்னி சிஇஓ பாப் இகர், டிரம்ப்பின் மகள் இவாங்கா, அடோப் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தனு நாராயண், பூட்டான் மன்னர், ராணி உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்களை வரவேற்பதற்காக தயாராகி வரும் பிரத்யேக துப்பட்டாக்களை நீடா அம்பானி பார்வையிட்டு வந்தார். அதோடு, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய இரு மாநில பாரம்பரிய முறைபடி பட்டாண் துப்பட்டாக்கள் தயாரிப்பதாக வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |