இந்தியாவுக்காக முதல் தங்கம் வென்ற 22 வயது தமிழன்! உலக சாம்பியன்ஷிப்பில் வரலாற்று சாதனை
Speed Skating உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் ஆனந்த்குமார் வேல்குமார் இந்தியாவின் முதல் தங்கத்தை வென்றார்.
Speed Skating
சீனாவின் பெய்டைஹேயில் Speed Skating உலக சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
இதில் சீனியர் ஆடவர் 1000 மீற்றர் ஓட்டத்தில் தமிழரான ஆனந்த்குமார் வேல்குமார் (22) கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.
இதன்மூலம் Speed Skatingயில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார்.
முன்னதாக, இதே சாம்பியன்ஷிப்பில் 500 மீற்றர் ஸ்பிரிண்ட் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை ஆனந்த்குமார் வென்றார்.
சாம்பியன்
சென்னையின் கிண்டிப் பகுதியைச் சேர்ந்த Speed Skating வீரரான ஆனந்த்குமார், 1 நிமிடம் 24 நிமிடங்களில் இலக்கை அடைந்தார்.
What a glorious moment for Indian sports!
— Kiren Rijiju (@KirenRijiju) September 15, 2025
Anandkumar Velkumar clinches Gold in the 1000m Sprint at the Speed Skating World Championship 2025, becoming the first-ever Indian World Champion in the sport.
Proud of you, Champ! pic.twitter.com/DbXd4NowX4
ஆனந்த்குமாரின் சாதனையை பாராட்டிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, "இந்திய விளையாட்டுகளுக்கு என்ன ஒரு புகழ்பெற்ற தருணம்! 2025ஆம் ஆண்டு Speed Skating உலக சாம்பியன்ஷிப்பில் ஆனந்த்குமார் வேல்குமார் 1000 மீற்றர் ஓட்டத்தில் தங்கம் வென்று, விளையாட்டில் முதல் இந்திய உலக சாம்பியனானார்.
உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன், சாம்பியன்!" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |