திருமணத்திற்கு முன்பே 51,000 பேருக்கு விருந்து வைத்து அசத்திய அம்பானி குடும்பம்
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானியி திருமணத்தையொட்டி 51,000 கிராமவாசிகளுக்கு திருமண விருந்து வைத்துள்ளார்கள்.
ஆனந்த் அம்பானி
திருமணம் உலக பணக்காரர்களுள் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்டிற்கும் வருகிற மார்ச் மாதம் முதலாம் திகதி பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறவிருக்கிறது.
ஆனந்த் அம்பானி ராதிகா மெர்சன்ட் என்ற பெண்ணை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்யவுள்ளனர்.
முகேஷ் அம்பானியின் இறுதி மகனின் திருமணம் என்பதால் மார்ச் 1 முதல் 3 ஆம் திகதி வரையில் ஜாம்நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது எனலாம்.
அம்பானி வீட்டு கல்யாணம் என்றால் சொல்லவா வேண்டும்? பல ஏற்பாடுகளும் பிரமாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் திருமணத்திற்கு முன்பே 51,000 பேருக்கு விஷேட விருந்து வைத்துள்ளார்கள்.
51,000 பேருக்கு ராஜ விருந்து
உலக கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்கள், சாதனையாளர்கள், அரசியலின் தலைவர்கள் என நூற்றுக்கணக்கானோர் நாளை தொடங்கவிருக்கு கொண்டாடத்தில் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
அதற்கு முன்னர் சாமான்யர்களுக்கும் மரியாதை அளிக்கும் வகையில் அம்பானி குடும்பத்தினர் 51 ஆயிரம் பேருக்கு நேற்றிரவு விருந்து வைத்துள்ளனர்.
ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் டவுன்ஷிப் அருகே உள்ள ஜோக்வாட் கிராமத்தில் கிராம மக்களுக்கு பாரம்பரிய குஜராத்தி உணவை பரிமாறியுள்ளனர்.
மேலும் இந்த விடயமானது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |