நீதா அம்பானியின் மரகத ஆபரணம், தங்க புடவை; விலையை கேட்டால் தலையே சுத்தும்
ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விழாவில் நீதா அம்பானி அணிந்திருந்த புடவை மற்றும் தங்க ஆபரணங்கள் அனைத்தும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஆனந்த் அம்பானி திருமணம்
உலக பணக்காரர்களுள் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்டிற்கும் கடந்த முதலாம் திகதி முதல் மூன்றாம் திகதி வரை திருமணத்திற்கான முந்தைய கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவை சிறப்பிப்பதற்காக பல பிரபலங்களும் பணக்காரர்களும் அழைக்கப்பட்டனர். முகநூல் நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் முதல் பில்கேட் வரை பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.
இதன்போது நீதா அம்பானி அணிந்திருந்த ஆடை மற்றும் ஆபரங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதன் விலை எவ்வளவு இருக்கும் என சமூக ஊடகத்திலும் பலராலும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
நீதா அம்பானியின் ஆடை
நீதா அம்பானி தனது மகனின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் காஞ்சிபுரம் கைத்தறி புடவையை அணிந்துள்ளார்.
புடவையை நெய்வதற்கான இயந்திரங்கள் அதிகமாக இருந்தாலும், கைத்தறியில் நெய்த ஆடைகளுக்கான மவுசு அதிகம்.
எனவே இதை தான் நீதா அம்பானியும் தேர்ந்தெடுத்துள்ளார். நெசவாளர்கள் பாரம்பரியத்துடன் நேர்த்தியாக நெய்து கொடுத்த காஞ்சிபுரம் பட்டுப் புடவையைதான் அவர் அணிந்திருந்தார்.
மரகத பச்சை ஆபரணம்
நீதா அம்பானி விலை உயர்ந்த ஆடைகள் மற்றும் ஆடம்பரமா நகைகளை சேகரிப்பதில் பிரபலமானவர். திருமணத்தின் முந்தைய கொண்டாடத்தின் மூன்றாவது நாளில் நீதா அம்பானி அணிந்திருந்த மரகத பச்சை ஆபரணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அவர் அணிந்திருந்த மரகத பச்சை ஆபரணமானது ரூ.400 முதல் 500 கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதன் போது அவர் கையில் இருந்த மோதிரமும் பேச்சு பொருளாகிவிட்டது எனலாம். நீதா அம்பானியின் விரலில் இருந்த பெரிய வைர மோதிரமானது சொர்க்கத்தின் கண்ணாடி என அழைக்கப்படுகிறது.
இதன் விலை ஏறத்தாழ ரூ.53 கோடி இருக்கும். அதன் எடை 52.58 கேரட். NMACC தொடக்க விழாவிலும் இதே மோதிரத்தை நீதா அம்பானி அணிந்திருந்தார்.
மேலும் திருமணத்தின் முந்தைய கொண்டாடத்திற்காக முகேஷ் அம்பானி ரூ.1260 கோடியை செலவழித்துள்ளார்.
முந்தைய கொண்டாத்திற்கு இவ்வளவு செலவழிக்கிறார் என்றால், திருமணத்திற்கு எவ்வளவு செலவழிப்பார் என பலரும் வியப்பில் இருக்கின்றார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |