போட்டி நடத்த தகுதியான இடமில்லை - இந்திய ஓபனில் இருந்து விலகிய உலக சாம்பியன்
இந்திய ஓபனில் இருந்து விலகிய உலக சாம்பியன் ஆண்டர்ஸ் அன்டன்சன், டெல்லி போட்டி நடத்த தகுதியான இடமில்லை என விமர்சித்துள்ளார்.
இந்திய ஓபனில் இருந்து விலகிய உலக சாம்பியன்
2026 ஆம் ஆண்டுக்கான இந்திய ஓபன் பேட்மிண்டன்(2026 India Open) தொடர் ஜனவரி 13 ஆம் திகதி தொடங்கி ஜனவரி 18 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கான மொத்த பரிசுத்தொகையாக 9.5 லட்சம் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.8.56 கோடி) அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உலக தரவரிசையில் 3வது இடத்தில் உள்ளவரும், 4 முறை உலக பேட்மிண்டன் சாம்பியனுமான டென்மார்க் வீரர் ஆண்டர்ஸ் அன்டன்சன்(anders antonsen) இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Credit : ADI WEDA / EPA / Profimedia
இது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், "தொடர்ந்து 3வது ஆண்டாக நான் இந்த தொடரில் இருந்து ஏன் விலகினேன் என தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக உள்ளனர்.

மிக மோசமான காற்று மாசு காரணமாக டெல்லி இந்த தொடரை நடத்துவதற்கு தகுதியான இடமில்லை. கோடையில் டெல்லியில் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இதன் காரணமாக உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு (BWF), மீண்டும் எனக்கு 5,000 டொலர்கள் (இந்திய மதிப்பில் ரூ 4.50 லட்சம்) அபராதம் விதித்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
மேலும், டெல்லியின் காற்று தர குறியீட்டின் (AQI) ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளார்.
BWF விதிமுறைகளின்படி, தரவரிசையில் உள்ள முதல் 15 வீரர்கள் சூப்பர் 750 போட்டிகளில் பங்கேற்க வேண்டும் அல்லது அபராதம் செலுத்த வேண்டும்.
டெல்லியில் கடந்த சில ஆண்டுகளாகவே காற்று மாசு வெகுவாக அதிகரித்து வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |