தடியடி திருவிழாவில் இருவர் மரணம்! 100 பேர் காயம்
இந்திய மாநிலம் ஆந்திராவில் நடந்த தடியடி திருவிழாவில் இருவர் உயிரிழந்தனர்.
உற்சவ விழா
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது மல்லேஸ்வர சுவாமி கோயில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் கல்யாண உற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.
இதில் 23 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்துகொள்வர். அவர்கள் இரு குழுக்களாக பிரிந்து கல்யாண உற்சவம் முடிந்த பின்னர், நள்ளிரவில் தங்களுக்குள் தடியடி நடத்தி மோதிக் கொள்வார்கள். 100 ஆண்டுகளுக்கும் மேலாக இது நடந்து வருகிறது.
அதன் பின்னர் வெற்றி பெறும் குழுவைச் சேர்ந்தவர்கள் உற்சவ மூர்த்தியை எடுத்துச் செல்வார்கள். இந்த நிலையில் நேற்று இரவு நடந்த தடியடி திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
இருவர் மரணம்
அப்போது இரு குழுக்களாக பிரிந்து தடியால் தாக்கி அவர்கள் மோதிக்கொண்டனர். இதில் படுகாயமடைந்த இருவர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அருகில் உள்ள மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தடியடி உற்சவத்தை தடுத்து நிறுத்த அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வந்தாலும், ஊர் மக்கள் அதை மீறி உற்சவத்தை நடத்தி வருவதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |