அனில் அம்பானி மூத்த மகனுக்கு நடந்த திருமணம்! பங்கேற்காத சகோதரர் முகேஷ் அம்பானி... புகைப்படங்கள்
அனில் அம்பானி - டினா அம்பானி தம்பதியின் மூத்த மகன் அன்மோல் அம்பானிக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.
அதன்படி அன்மோல் அம்பானிக்கும் க்ரிஷா ஷா என்ற பெண்ணிற்கும் நேற்று திருமணம் நடந்தது. இந்த திருமணமானது அனில் அம்பானி குடும்ப வீட்டில் நடந்துள்ளது.
இந்த திருமணத்தில் அனில் அம்பானியின் சகோதரர் முகேஷ் அம்பானி பங்கேற்கவில்லை. ஆனால் அவர் மனைவி நீட்டா, மகன் ஆகாஷ், மகள் இஷா ஆகியோர் பங்கேற்றனர்.
அமிதாப்பச்சன், ஸ்வேதா பச்சன், ஜெயா பச்சன், நவ்யா நந்தா போன்ற சில பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.
அன்மோலும் க்ரிஷாவும் தங்கள் குடும்பத்தினர் மூலம் சந்தித்து, பின்னர் நிறைய நேரம் ஒருவருக்கொருவர் செலவிட்ட பின்னரே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
இருவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக அப்போது ஊடகங்களில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.