புடின் அமைதியை விரும்பவில்லை, அப்பட்டமாக நடிக்கிறார்: ஜேர்மனி அமைச்சர் அதிரடி குற்றச்சாட்டு
உக்ரைன் போர்நிறுத்தத்திற்கு தயாராக இருப்பதுபோல் புடின் நடிப்பதாக, ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்போக் குற்றம்சாட்டியுள்ளார்.
அமைதி முயற்சி
உக்ரைனின் இராணுவப் போராட்டங்கள் முன்னணியில் உள்ளதால் மார்ச் 11ஆம் திகதி அன்று, அமெரிக்காவுடன் சேர்ந்து 30 நாட்கள் போர்நிறுத்த திட்டத்தில் உடன்பட்டது.
ஆனால், அமெரிக்கத் திட்டத்தை நிராகரித்த புடின், கீவில் புதிய தலைமையை நிறுவுவது குறித்த வாய்வீச்சுகளை அதிகரித்தார்.
இந்த நிலையில், கீவ்விற்கு வந்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin), உக்ரைனில் அமைதி முயற்சிகளை முடக்கியதாக ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்போக் (Annalena Baerbock) குற்றம்சாட்டியுள்ளார்.
சர்வதேச சட்டத்தை மீறும் புடின்
அவர் தனது அமைச்சகத்தால் பகிரப்பட்ட அறிக்கையில், "உடனடி போர்நிறுத்தத்திற்கு உக்ரைன் தயாராக உள்ளது. புடின்தான் நேரத்திற்காக விளையாடுகிறார். அவர் அமைதியை விரும்பவில்லை, மேலும் தனது ஆக்கிரமிப்புப் போரைத் தொடர்கிறார்.
இது சர்வதேச சட்டத்தை மீறுவதாகும். அவர் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் இருப்பதாக நடிக்கிறார். ஆனால் அவரது இலக்குகளில் இருந்து ஒரு அங்குலம் கூட விலகவில்லை.
அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கு இடையிலான முட்டுக்கட்டையைக் கருத்தில் கொண்டு, ஐரோப்பியர்களாகிய நாம் உக்ரைனின் பக்கம் நிற்கிறோம் என்பதைக் காட்டுவது மிகவும் முக்கியம். மேலும், இப்போது அதை எப்போதும் இல்லாத அளவுக்கு ஆதரிப்பது மிகவும் முக்கியம்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |