வந்ததுமே சாமி கும்பிட்டு பிரச்சாரத்தை துவங்கிய அண்ணாமலை., சூடு பிடிக்கும் கோயம்புத்தூர் தொகுதி
கோவை மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரத்தை துவங்கியுள்ளார்.
கோவை மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் அண்ணாமலை, அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் கணபதி ராஜ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர்.
சிங்கத்தின் கோட்டையில் ஆடு சிக்கிவிட்டது என்று அதிமுகவினர் ஒருபுறம் பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர். மறுபுறம், டெல்லியில் இருந்து கோவை வந்ததுமே சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து தேர்தல் பிரச்சாரத்தை அண்ணாமலை தொடங்கி விட்டார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி கோவைக்கு வந்ததில் இருந்தே அண்ணாமலையின் தேர்தல் வியூகம் ஆரம்பித்துவிட்டது என்று சொல்கிறார்கள்.
நேற்று மாலை கோவைக்கு வருகை தந்த அண்ணாமலைக்கு பாஜகவினர் சார்பில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை கோவையில் உள்ள இரண்டாவது சபரிமலை என்று அழைக்கப்படும் சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலுக்கு சட்டையின்றி தோளில் அங்கவஸ்திரம் அணிந்தபடி சென்ற அண்ணாமலை பூஜைகளில் பங்கேற்றார்.
பின்பு, அங்குள்ள பசுக்களுக்கும் கீரைகளை வழங்கினார். அதனை தொடர்ந்து கோயிலில் திரண்ட பக்தர்களிடம் பாஜகவுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரத்தை துவங்கினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |