பொதுவெளியில் சசிகலா புஷ்பாவை சீண்டிய பாஜக வேட்பாளர்.., சர்ச்சையாகும் வீடியோ
பாஜக திருவள்ளூர் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பொன்.பாலகணபதியின் சர்ச்சை வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
திருவள்ளூர் தொகுதி வேட்பாளர்
திருவள்ளூர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் பாலகணபதிக்கு சீட் கொடுக்கப்பட்டது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இவர் மீது பொதுவெளியில் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கடந்த 2022 - ஆண்டு தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவுநாளில் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பாஜகவினர் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது, முன்னாள் எம்பியும், பாஜக நிர்வாகியுமான சசிகலா புஷ்பாவை தற்போது திருவள்ளூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் பாலகணபதி பொதுவெளியில் தவறான ரீதியில் தொடுவது போன்று வீடியோவில் உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
வேட்பாளர் அறிமுகம்.. ?
— Aspin C. S. Kiruba (@KirubaAspin) March 22, 2024
மேற்கண்ட வீடியோவில் இருப்பவர்தான் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன். பால கணபதி. pic.twitter.com/G3tZnX0uVR
மேலும்,சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியிடம் புகார் தெரிவித்தையடுத்து, விளக்கம் தரக் கோரி தேசிய மகளிர் ஆணையம் பால கணபதிக்கு நோடீஸ் அனுப்பியது.
இந்நிலையில் தான் பாஜகவின் வேட்பாளராக பால கணபதியை நிறுத்தியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |