மத்திய அமைச்சராகும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.., வெளியான பட்டியல்?
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல்
இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.
இதில் 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் பொய்யாக்கும் வகையில் இந்தியா கூட்டணி ஏராளமான இடங்களைக் கைப்பற்றியது.
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளன.
இதன் காரணமாக அறுதிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மூன்றாம் முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில் அமைச்சரவை குறித்த பேச்சுவார்த்தைகளும் தீவிரமடைந்துள்ளது.
தயாராகும் பட்டியல்
இந்நிலையில், அமைச்சரவை பொறுப்புகள் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா டெல்லி இல்லத்தில் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து இலாகாக்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஜே.பி.நட்டாவும், அமித்ஷாவும் ஆலோசித்துள்ளனர்.
இதில், பாதுகாப்புத்துறை, நிதித்துறை, உள்துறை, ரயில்வே மற்றும் சாலைப் போக்குவரத்து துறைகளைத் தக்க வைக்க பாஜக முடிவு செய்துள்ளது.
மேலும், விமானப் போக்குவரத்துத் துறை, இரும்பு மற்றும் உருக்கு சார்ந்த துறையை கூட்டணி கட்சிக்கு தர திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோருக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் வழங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |