கோவை மக்களுக்கு G pay மூலம் அண்ணாமலை பணம் அனுப்புகிறார்: திமுக பரபரப்பு புகார்
கோவையில் வாக்காளர்களுக்கு G Pay மூலம் அண்ணாமலை பணம் அனுப்பி வருவதாக திமுக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.
தமிழகத்திற்கான மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை (ஏப்.19) நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறவிருக்கிறது.
இதில் கோவை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி ஜெகநாதன் போட்டியிடுகின்றனர். இதனால், கோவை தொகுதி முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கோவை வாக்காளர்களுக்கு அண்ணாமலை பணம் கொடுப்பதாக தேர்தல் அலுவலரிடம் திமுக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.
திமுக புகார்
அண்ணாமலை மீது திமுக கொடுத்த புகாரில், "நான் கோவை வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் அமைப்பாளராக உள்ளேன். பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக அவரது தேர்தல் பணிமனையில் இருந்து வாக்காளர்களுக்கு அலைபேசியின் மூலம் அழைத்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டு வாக்காளர்களுக்கு GPay மூலம் பணம் அனுப்பி வருகிறார்.
மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி நேற்று மாலையுடன் தொகுதிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் தொகுதியை விட்டு வேளியேறி இருக்க வேண்டும்.
ஆனால் தேர்தல் நட்டத்தை விதிமுறைகளுக்கு மாறாக சட்டவிரோதமாக கோவை நாடாளுமன்ற பாஜாக தேர்தல் அலுவலகமான அவினாசி சாலை அரவிந்த் கண் மருத்துவமனை அருகில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைசேர்ந்தவர்கள் தற்போதும் தங்கி இருந்து வாக்காளர்களுக்கு போன் செய்து தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கோரியும் GPay மூலம் ஓட்டுக்கு பணம் வினியோகம் செய்து வருகிறார்" என்று கூறியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |