தென்தமிழகத்தில் பெருவெள்ளம்.. அண்ணாமலை தொடங்கிய MissingCM ட்ரெண்டிங்
வெள்ள பாதிப்புகளை பார்வையிடாமல், தமிழக முதலமைச்சர் டெல்லிக்கு சென்றிருப்பதாக அண்ணாமலை பதிவிட்ட MissingCM என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
டெல்லியில் தமிழக முதல்வர்
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ததில் பல்வேறு பகுதி மக்கள் பாதிப்படைந்தனர்.
இந்நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு சென்றுள்ளார்.
அவர் அங்கிருந்தபடியே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்பது குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பித்து வருகிறார். மேலும்,ஹெலிகாப்டர்களை கூடுதலாக வழங்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அண்ணாமலை பதிவு
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "ஊழலை மட்டுமே தனது அரசியல் பிழைப்பாகக் கொண்டு எதிர்ப்புக் குரல்களை அதிகார பலத்தின் மூலம் அடக்கிய ஒரு போலியான சித்தாந்தம், இன்று சீட்டுக் கட்டு போல சரிந்து விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே, இலாகா இல்லாத திமுக அமைச்சர் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ளார்.
தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடியோ ஊழல் குற்றச்சாட்டில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்.
தென் தமிழகத்தில் மக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இந்த துயரமான வேளையில், தமிழக முதல்வரோ, ஊழல்வாதிகள் மற்றும் குடும்ப அரசியல்வாதிகளின் இந்தி கூட்டணி நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லிக்குச் சென்றிருக்கிறார்" எனக் குறிப்பிட்டு #MissingCM என்பதையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.
இதனால், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பலரும் MissingCM என்ற ஹேஸ்டேகை பதிவிட்டு ஆளுங்கட்சியை விமர்சித்து வருகின்றனர். தற்போது, இந்திய அளவில் MissingCM என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |