Apple நிறுவனத்தின் அடுத்த அதிரடி வெளியீடு - OLED திரையுடன் வரவிருக்கும் MacBook Pro
உலகப் புகழ்பெற்ற Apple நிறுவனமானது OLED திரையுடன் MacBook Pro-ஐ வருகிற 2 ஆண்டுகளுக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளதாக Omdia நிறுவனத்தின் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
கோடியில் புரளும் சச்சின் டெண்டுல்கரின் மகள்; அவ்வளவு பெரிய சாம்ராஜியத்தை தனியாக உருவாக்கியது எப்படி?
OMIDA அறிக்கை
OMIDA நிறுவனம் என்பது Market Research நிறுவனமாகும். அது அடிக்கட்டி அறிக்கை வெளியிட்டு வரவிருக்கும் புதிய சாதனங்களின் அம்சத்தை தெரிவிக்கும்.
அந்தவகையில் சமீபத்தில் OMIDA நிறுவனத்தின் மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையில், Smart Phone, Tablets, Laptops போன்ற சாதனங்களின் Display நுகர்வோர் தேவை 2023 தொடக்கம் 2031ஆம் ஆண்டு வரை 37% அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேரளாவில் பிறந்து, படிப்பை பாதியிலேயே நிறுத்திய அந்த நபர்; தற்போது சுந்தர் பிச்சையை விட அதிக சம்பாதித்தது எப்படி?
வரவிருக்கும் Apple Pro
Apple Pro மாடல்கள் பயனர்கள் இடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொலைப்பேசிகளில் OLED திரையுடன் வெளியிடும் Apple நிறுவனம், இன்று வரையில் MacBook Pro-ஐ வெளியிடவில்லை.
இது குறித்து OMIDA நிறுவனத்தின் மூத்த முதன்மை ஆய்வாளர் ரிக்கி பார்க் கூறுகையில், வருகிற 2026 ஆம் ஆண்டில் MacBook Pro OLED திரையுடன் Apple நிறுவனம் வெளியிடும் என கூறியுள்ளார்.
OLED அதாவது ஆர்கானிக் லைட் எமிட்டிங் டையோட்ஸ் ஸ்கிரீன்கள் (Organic Light Emitting Diodes Screens) ஒவ்வொரு பிக்சலையும் (Pixel) தனித்தனியாக கட்டுப்பாடு செய்கின்றன.
இதன் மூலம் LCD மற்றும் LED Display உடன் ஒப்பிடும்போது மிகவும் துல்லியமான Color reproduction OLED இல் கிடைக்கும்.
சமீபத்தில் iPad Pro ஆனது OLED திரையுடன் அறிமுகப்படுத்தப்பட்து. அதுவே OLED திரைக்கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முதல் Tablet ஆகும்.
Ultra Retina XDR OLED பொருத்தப்பட்ட iPad Pro இன் தேவை 2024 ஆம் ஆண்டில் மூன்று மடங்காக உயரும் என OMIDA நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து Apple நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியில் நிகழ்ந்த ஆனந்த் அம்பானி திருமண விழா - விருந்தினர்களுக்கு வழங்கிய விலையுயர்ந்த பரிசு என்ன தெரியுமா?
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |