16,000 அடியில் பறந்த விமானத்தில் இருந்து விழுந்த ஐபோன்: என்ன உடையலையா..!நெட்டிசன்கள் ஆச்சரியம்
சமீபத்தில் கதவு திடீரென உடைந்து விழுந்ததால் அவசர அவசரமாக விமானம் ஒன்று தரையிறக்கப்பட்ட செய்தி வெளியான நிலையில், நடுவானில் பறந்து கொண்டு இருந்த அந்த விமானத்தில் இருந்து கீழே விழுந்த ஐபோன் உடையாமல் பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடுவானில் உடைந்து பறந்த விமான கதவு
அலாஸ்கா விமான நிறுவனத்தின் போயிங் 737-9 MAX விமானம்(Boeing 737 Max Flight) 171 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்களுடன் போர்ட்லேண்டில் இருந்து ஒண்டாரியோ-வுக்கு சென்றது.
ஆனால் நடுவானில் யாரும் எதிர்பாராத வகையில் விமானத்தின் கதவு ஒன்று திடீரென காற்றில் பீய்த்து கொண்டு சென்றது, இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் பயத்தில் கூச்சலிட்டு அலறினர்.
Passengers onboard the Alaska Airlines flight recall the door plug blowout, describing it as a "gaping hole." pic.twitter.com/MkiMtbze7M
— USA TODAY (@USATODAY) January 8, 2024
இதையடுத்து விமானம் அவசர அவசரமாக போர்ட்லேண்ட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர், அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சிலவற்றை பயணிகள் தங்கள் செல்போனில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட நிலையில் வேகமாக பரவியது.
உடையாமல் கிடைத்த ஐபோன்
இந்நிலையில் போயிங் 737-9 MAX விமானத்தில் நடுவானில் கதவு பிய்த்துக் கொண்டு சென்ற போது விமானத்தில் இருந்து கீழே விழுந்த ஐபோன் உடையாமல் பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பதாக நபர் ஒருவர் X தளத்தில் பதிவிட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேனதன் பேட்ஸ் என்பவர் X தளத்தில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், ஐபோன் ஒன்றை பேரன்ஸ் சாலையில் சென்ற போது கண்டெடுத்தேன், அந்த ஐபோன் அப்போது பிளைட் மூட் செய்யப்பட்டு இருந்தது, உடனடியாக விமான விபத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் N.T.S.Bக்கு தகவல் வழங்கினேன்.
Found an iPhone on the side of the road... Still in airplane mode with half a battery and open to a baggage claim for #AlaskaAirlines ASA1282 Survived a 16,000 foot drop perfectly in tact!
— Seanathan Bates (@SeanSafyre) January 7, 2024
When I called it in, Zoe at @NTSB said it was the SECOND phone to be found. No door yet😅 pic.twitter.com/CObMikpuFd
அப்போது தான் இந்த ஐபோன் விமானம் பறந்து கொண்டு இருந்த 16,000 அடி உயரத்தில் இருந்து விழுந்து இருப்பதும், ஆனால் இந்த ஐபோன் உடையாமல் அப்படியே இருப்பதையும் கண்டேன் என தெரிவித்துள்ளார்.
விமான விபத்துக்கள் குறித்து விசாரணை நடத்தும் N.T.S.Bயினர், இது கண்டெடுக்கப்பட்ட 2வது போன் என தெரிவித்தனர் என்றும் சேனதன் பேட்ஸ் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Alaska Airlines Boeing 737, Boeing 737 Max, Alaska Airlines, Ontario, California, Portland, Oregon, iPhones, Smartphone, Apple, iPhone