ரஷ்யா-அரபு தூதரக மாநாடு திடீர் ஒத்திவைப்பு: ஏமாற்றத்தில் புடின்
மாஸ்கோவில் நடைபெற இருந்த ரஷ்யா-அரபு மாநாடு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா-அரபு மாநாடு ஒத்திவைப்பு
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அக்டோபர் 15ம் திகதி திட்டமிடப்பட்டிருந்த ரஷ்யா-அரபு தூதரக மாநாடு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி நேரத்தில் மாநாடு ரத்து செய்யப்பட்டிருந்தாலும், இந்த மாநாடு மீண்டும் மற்றொரு திகதிக்கு மாற்றப்பட்டு நிகழ்ச்சியை மீண்டும் நடத்துவது குறித்து ரஷ்யா நம்பிக்கை கொண்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் வெளியுறவு கொள்கை தொடர்பில் இந்த மாநாடு ரஷ்யாவின் முக்கிய முயற்சியாக பார்க்கப்பட்டது.
மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு அரபு நாடுகள் முழுவதிலும் ரஷ்யாவிற்கு உள்ள ஆதரவு மற்றும் செல்வாக்கை வெளிகாட்டுவதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது.
மாநாட்டின் புதிய திகதி குறித்து டெலிகிராம் நேர்காணலில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் வெளியுறவு கொள்கை உதவியாளர் யூரி உஷாகோவ் வெளியிட்ட தகவலில், டிரம்ப்பின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதன் பின்னணி நிலைமைகளைப் பொறுத்து புதிய திகதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |