சிரியாவின் ஜனாதிபதி கிளர்ச்சியாளர்களிடமிருந்து தப்பி ரஷ்யாவுக்குச் சென்றது எப்படி?
சிரியா பற்றி எரிந்துகொண்டிருந்த நேரத்தில், சிரியாவின் ஜனாதிபதியான பஷார் அல் அசாத் எப்படி தப்பி ரஷ்யாவைச் சென்றடைந்தார் என்பது குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிரியாவின் ஜனாதிபதி ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றது எப்படி?
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் ஒவ்வொரு நகரமாக கைப்பற்றி, தலைநகரை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்க, சிரியாவின் ஜனாதிபதியான பஷார் அல் அசாதோ, மாயமாகிவிட்டார்.
அவர் விமானம் ஒன்றில் தப்பிச் சென்றதாகவும், அந்த விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும் செய்திகள் பரவின.
ஆனால், அவர் ரஷ்யாவிலிருப்பதாக பின்னர் செய்திகள் வெளியாகின.
நாடு முழுவதும் கிளர்ச்சியாளர்கள் சுற்றிக்கொண்டிருக்க, அசாத் சிரியாவிலிருந்து வெளியேறியது எப்படி என்பது குறித்து பல கருத்துகள் நிலவுகின்றன.
நிபுணர் கருத்து
பாதுகாப்பு நிபுணரான Will Geddes என்பவர், அசாத் தன்னைப்போலவே தோற்றமளிக்கும் டூப்களை பயன்படுத்தி தப்பியிருக்கலாம் என்கிறார்.
அசாத்தைப் பொருத்தவரை, அவர், முன்கூட்டியே தானும் தனது குடும்பமும் சிரியாவிலிருந்து தப்பி வெளியேறுவது குறித்து தெளிவாக திட்டமிட்டுள்ளார் என்கிறார் Will Geddes.
அசாதின் ஜனாதிபதிக்கான காரில், அசாத் போன்றோ அல்லது அவரது மனைவி போன்றோ தோற்றமளிக்கும் ஒருவரை பயணிக்கச் செய்து, கிளர்ச்சியாளர்களை திசை திருப்பிவிட்டு, இவர் வேறு பக்கமாக பயணித்திருக்கலாம்.
மேலும், அசாத் குடும்பம் வேண்டுமென்றே கொஞ்சம் தங்கக்கட்டிகள் முதலான விலையுயர்ந்த பொருட்களை அரண்மனையில் விட்டுவர, அதனால் கிளர்ச்சியாளர்களின் கவனம் திசைதிரும்ப, அது அசாத் தப்புவதற்கு நேரம் ஏற்படுத்திக்கொடுத்திருக்கலாம்.
பின்னர் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளாமல் தப்ப, ஹெலிகொப்டர் மூலம் அவர் பயணித்திருக்கலாம்.
அதுவும் பல ஹெலிகொப்டர்களை பறக்கவிட்டு, ஒன்றில் அசாத் பயணித்து விமான நிலையம் சென்று தனியார் ஓடுபாதை ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தில் தப்பிச் சென்றிருக்கலாம்.
விடயம் என்னவென்றால், அசாதுக்கு ரஷ்ய உளவாளிகள் உதவியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
மேலும், ரஷ்ய ராணுவத்தில் பயன்படுத்தப்படுவதுபோன்ற ஒரு விமானம் சிரிய தலைநகர் டமாஸ்கஸிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புறப்பட்டதை, விமானங்களை கண்காணிக்கும் இணையதளமான Flightradar24 கண்டறிந்துள்ளது.
Homs என்னுமிடத்தில் திடீரென யூ டர்ன் எடுத்த அந்த விமானம், புறப்பட்டு 40 நிமிடங்களுக்குப் பிறகு, காலை 5.29 மணிக்கு ராடாரிலிருந்து மறைந்து, ஒரு வயலை நோக்கிச் சென்றுள்ளது.
பின்னர் அசாத் பயணித்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், அப்படி வதந்திகளை பரப்பியதில் ரஷ்யாவுக்கும் பங்கு உள்ளதாக கருதப்படுகிறது.
அசாத் விமான விபத்தில் உயிரிழந்துவிட்டதாக தகவல் பரவ, அசாதோ பத்திரமாக ரஷ்யாவைச் சென்றடைந்துவிட்டார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |